மருத்துவர் ஐஸ்வர்யாவை கரம்பிடித்தார் இயக்குனர் ஏ.எல்.விஜய்

சினிமா
Updated Jul 12, 2019 | 10:57 IST | Zoom

இயக்குனரும் நடிகை அமலா பாலின் முன்னாள் கணவரும் ஆன ஏ.எல்.விஜய் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Director AL Vijay Marriage
இயக்குனர் ஏ.எல்.விஜய் திருமணம்   |  Photo Credit: Twitter

நடிகை அமலா பாலின் முன்னாள் கணவரும் பிரபல இயக்குனருமான ஏ.எல்.விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

அஜித்தின் 'கிரீடம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்  ஏ.எல்.விஜய். பின்பு 'மதராசபட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'தேவி' போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் இளைய மகன் ஆவர். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 'தெய்வத்திருமகள்' மற்றும் 'தலைவா' படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். பின்பு 2017-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதனை தொடர்ந்து சென்ற ஜூன் மாதம் இயக்குனர் ஏ.எல்.விஜய் அவரின் இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் அவர் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் என்றும் ஜூலையில் ஒரு குடும்ப விழாவாக இந்த திருமணம் நடைபெறும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட ஏ.எல்.விஜய் - ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடைபெற்றது. 

AL Vijay Wedding

இறுதியாக 'தேவி-2' படத்தை இயக்கிய ஏ.எல் விஜய் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருவதாக செய்திகள் பரவிவருகிறது.   

NEXT STORY
மருத்துவர் ஐஸ்வர்யாவை கரம்பிடித்தார் இயக்குனர் ஏ.எல்.விஜய் Description: இயக்குனரும் நடிகை அமலா பாலின் முன்னாள் கணவரும் ஆன ஏ.எல்.விஜய் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola