வெளியானது துருவ் விக்ரமின் ஆதித்யவர்மா டீசர்! பாலாவின் வர்மா டீசரைப் பார்த்தீங்களா!?

சினிமா
Updated Jun 16, 2019 | 15:59 IST | Zoom

விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் டீசர் இன்று வெளியானது.  

Dhruv Vikram's Adithya Varma Teaser
Dhruv Vikram's Adithya Varma Teaser  |  Photo Credit: Twitter

2017- ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. அந்தப் படத்தை விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்க தமிழின் வர்மா என ரிமேக் செய்யப்பட்டது. படத்தின் ட்ரையிலர் வெளியான நிலையில், தயாரிப்பாளர் சார்பில் படம் சரியாக வரவில்லை எனவும் திரும்ப ரீஷூட் எடுக்க இருப்பதாகவும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய படத்துக்கு ஆதித்ய வர்மா என பெயரிட்டு மார்ச் மாதம் இதன் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. இந்த ரிமேக்கில் வர்மா படத்தில் நடித்த மேகா சௌத்திரியையும் மாற்றிவிட்டார்கள். அவருக்கு பதிலாக அக்டோபர் பட நாயகி பனிதா சந்த் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை அர்ஜுன் ரெட்டி தெலுங்கில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரி சய்யா இயக்கியுள்ளார். இசை அர்ஜுன் ரெட்டி இசையமைப்பாளர் ராதான் தமிழுக்கும் இசையமையமைத்து இருக்கிறார். கஜினி, ரப்னே பனாதி ஜோடி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்தப்படத்தின் டீஸர் இன்று வெளியானது. ரிலீஸ் தேதி டீசரில் குறிப்பிடவில்லை, படக்குழு விரைவில் வெளியிடும் என்று 

படத்தின் டீசர்: 

இதற்கு முன்னா பாலா இயக்கத்தில் உருவான கைவிடப்பட்ட வர்மா பட டீசரையும் பார்த்துவிடுங்களேன்!

 

 

 

NEXT STORY
வெளியானது துருவ் விக்ரமின் ஆதித்யவர்மா டீசர்! பாலாவின் வர்மா டீசரைப் பார்த்தீங்களா!? Description: விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் டீசர் இன்று வெளியானது.  
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles