பரபரக்கும் தனுஷின் அசுரன் ட்ரைலர்! - பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பாராஜ் வாழ்த்து

சினிமா
Updated Sep 09, 2019 | 13:06 IST | Times Now

வெளியான 18 மணி நேரத்தில் அசுரன் ட்ரைலரை 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அசுரன் ட்ரைலர்
Asuran trailer  |  Photo Credit: YouTube

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றிமாறன் - நடிகர் தனுஷின் 'அசுரன்' பட ட்ரெய்லர் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை' ஆகிய படங்களை தொடர்ந்து 4-வது முறையாக நடிகர் தனுஷும் இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்துள்ள படம் 'அசுரன்'. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பாலாஜி சக்திவேல், பசுபதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் மற்றும் பாடகர் டீஜே இப்படத்தில் தனுஷின் மகன்களாக நடித்துள்ளனர். 

ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள 'அசுரன்' படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் தனுஷ் வழக்கம் போல தனது அசரடிக்கும் நடிப்பில் ஃப்ரேம் முழுக்க விரிந்து கிடக்கிறார். ’’நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துகிடுவானுங்க, ரூவா இருந்தா புடுங்கிகிடுவானுங்க, படிப்ப மட்டும் நம்மகிட்டேருந்து எடுத்துக்கவே முடியாது’’ என்ற ஆழமான வசனகளால் இந்த ட்ரைய்லர் கவனம் ஈர்த்துள்ளது. வெளியான 18 மணி நேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 

 

 

அசுரன் ட்ரைலரை மக்கள் மட்டுமல்லாமல் திரைதுறையினரும் பாராட்டி வருகிறார்கள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்கிற நாவலை தழுவி உருவாகியுள்ளது 'அசுரன்' திரைப்படம்.  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் படமாக்கப்பட்ட இப்படம் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.   

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...