தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' விரைவில் ரிலீஸ் ?

சினிமா
Updated Jul 12, 2019 | 14:14 IST | Zoom

தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் ஜூலை-26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் பரவிவருகின்றன.

Enai Noki Paayum Thota
எனை நோக்கி பாயும் தோட்டா  |  Photo Credit: Twitter

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் ஜூலை-26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.   

2016-ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் கெளதம் மேனன் முதல் முறையாக இணைந்து பணியாற்றியுள்ள  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.  சசிகுமார், சதீஷ், சுனைனா, ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகரும் இசையமைப்பாளருமான தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து 'மறுவார்த்தை பேசாதே', 'விசிறி', 'நான் பிழைப்பேனோ' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து டீசர் மற்றும் டிரைலரும் வெளியானது.  

பல முறை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் படம் மட்டும் திரைக்கு வரவில்லை. இந்த ஆண்டு
பிப்ரவரி மாதம் தணிக்கை குழுவில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த மாதம் 26-ஆம் தேதி என்னை நோக்கி பாயும் தோட்டா திரைக்கு வர வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவுகிறது.

நிதி சிக்கல் காரணமாக வெளியாகாமல் இருந்த இப்படத்தின் பிரச்சனைகள் முடிந்து பைனான்சியர் அஸோஸியேஷனில் இப்படத்தை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் இப்படத்தின் மற்றொரு டிரைலர் வெளியிடப்பட்டு, ஜூலை-26 ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...