தனுஷின் 'அசுரன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா
Updated Sep 06, 2019 | 18:43 IST | Zoom

தனுஷின் 'அசுரன்' படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அசுரன்' படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது, 'Asuran' Trailer Releasing on September 8
'அசுரன்' படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது  |  Photo Credit: Twitter

நடிகர் தனுஷின் 'அசுரன்' படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை' ஆகிய படங்களை தொடர்ந்து 4-வது முறையாக நடிகர் தனுஷும் இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்துள்ள படம் 'அசுரன்'. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பாலாஜி சக்திவேல், பசுபதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் மற்றும் பாடகர் டீஜே இப்படத்தில் தனுஷின் மகன்களாக நடிக்கின்றனர். 

ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள 'அசுரன்' படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

 

 

 

 

எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்கிற நாவலை தழுவி உருவாகியுள்ளது 'அசுரன்' திரைப்படம்.  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் படமாக்கப்பட்ட இப்படம் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.    
 

NEXT STORY