'எக்ஸ்ட்ராடினரி தனுஷ்’ - புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் இயக்குனர்!

சினிமா
Updated May 16, 2019 | 00:12 IST | Zoom

புதுப்பேட்டை, ஆடுகளம், வடசென்னை என்று அந்த பட்டியலின் நீளம் அதிகம். தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார் தனுஷ். 

cinema, சினிமா
'அசுரன்’ தனுஷ்  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்றிற்கு ஸ்பெயினில் கிடைத்த வரவேற்பு பற்றி பாராட்டித் தள்ளியுள்ளார் அதன் இயக்குனர். 

கோலிவுட்டில் கடந்த 17 வருடங்களுக்கும் மேலாக பிரபலமான சினிமா ஐகானாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பெரும்பாலும் இவர் நடிப்பில் தரமான கதைகளைக் கொண்ட சினிமாக்களே வெளிவரும். 

புதுப்பேட்டை, ஆடுகளம், வடசென்னை என்று அந்த பட்டியலின் நீளம் அதிகம். தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார் தனுஷ். 

 

 

தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என்று பயணப்பட்டு கதைகளை விரும்பித் தேடி நடிப்பவர் தனுஷ். அப்படி அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம்தான் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கீர்’. 

ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்சு மொழிகளில் வெளியாகிய இந்த திரைப்படத்திற்கு ஸ்பெயின் நாட்டில் அட்டகாச வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் கென் ஸ்காட் மகிழ்ச்சியுடன் வெளியிட்டு, தனுஷை புகழ்ந்துள்ளார்.  நடிகர் தனுஷும் இதற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். 

NEXT STORY