’உட்கார்ந்துருக்க ஸ்டைலையே சொல்வேன் அது ஆங்கரிங் பண்ணின மூஞ்சியானு’-தரமான சம்பவத்துடன் ரீ என்ட்ரி ‘டிடி’!

சினிமா
Updated May 16, 2019 | 00:01 IST | Zoom

‘என்கிட்ட மோதாதே சீசன் 2’ கேம் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் டிடி.

cinema, சினிமா
திவ்ய தர்ஷினி  |  Photo Credit: Twitter

சென்னை: கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தனது அபிமான காம்பியரிங் கெரியரைக் கையிலெடுக்கிறார் டிடி என்று சின்னத்திரையில் செல்லமாக அழைக்கப்படும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

கிட்டதட்ட 20 வருடங்கள் காம்பியரிங் அனுபவமுள்ளவர் திவ்ய தர்ஷினி. ரசிகர்களால் செல்லமாக டிடி என்று அழைக்கப்படுபவர். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த டிடி, ஒரு வருடமாக காம்பியரிங்கிற்கு ப்ரேக் விட்டிருந்தார். ‘காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சிக்கே எக்கசக்கமான ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்திருந்தவர் டிடி.

ஜோடி நம்பர் 1, அச்சம் தவிர் என்று இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பட்டியல் பெரியது. தெளிவான உச்சரிப்பு, பிரபலங்களைக் கையாளும் பாங்கு என்று காம்பியரிங் உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டிடி. விரல் விட்டு எண்ணக் கூடிய பிரபலமான காம்பியரர்களில் ஒருவர் டிடி அலைஸ் திவ்ய தர்ஷினி. 

இந்நிலையில் அவர் மீண்டும் தொகுப்பாளராக களத்தில் இறங்குகிறார். ‘என்கிட்ட மோதாதே சீசன் 2’ கேம் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் டிடி.

இதற்காக பேட்ட ஸ்டைலில் ஒரு ஸ்பெஷல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. ‘சிறப்பான தரமான சம்பவம்’ என்று இதை மகிழ்ச்சியாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திவ்ய தர்ஷினி. மேலும், இந்த நிகழ்ச்சியின் தொடக்க எபிசோடில் அட்டகாசமான ஒரு நடனத்தையும் ரசிகர்களுக்கு விருந்தாக அளித்துள்ளாராம் டிடி. இந்த நிகழ்ச்சி ஞாயிறுதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY