படையப்பா ஈஸ் பேக்... வெளியானது 'தர்பார்' செகண்ட் லுக்!

சினிமா
Updated Sep 11, 2019 | 20:04 IST | Zoom

முதலில் வெளியான போஸ்டர்களில் போலீஸ் உடுப்பில் காணப்பட்ட ரஜினி தற்போது கட்டுமஸ்தான உடலோடு செகண்ட் லுக் போஸ்ட்டரில் மிரட்டியுள்ளார். 

வெளியானது 'தர்பார்' செகண்ட் லுக் போஸ்டர், 'Darbar' movie second look poster released
வெளியானது 'தர்பார்' செகண்ட் லுக் போஸ்டர்  |  Photo Credit: Twitter

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

'பேட்ட' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரஜினியின் '2.0' படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. 

மிகவும் இளமையான தோற்றத்தில் ரஜினி உடற்பயிற்சி செய்வது போல் தோன்றும் இப்போஸ்டர் மிகவும் வைரல் ஆகி வருகிறது. 68 வயதிலும் ரஜினி இப்படி கச்சிதமாக உடம்பை வைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. முதலில் வெளியான போஸ்டர்களில் போலீஸ் உடுப்பில் காணப்பட்ட ரஜினி தற்போது கட்டுமஸ்தான உடலோடு செகண்ட் லுக் போஸ்ட்டரில் மிரட்டியுள்ளார். 

 

 

1992-ஆம் ஆண்டு வெளியான 'பாண்டியன்' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினியின் 'பாட்ஷா', 'காலா' என பல வெற்றி படங்களை போல 'தர்பார்' படமும் மும்பையை கதைக்களமாக கொண்டுள்ளது. இதுவரை ரஜினியின் சிறந்த லூக்காக கருதப்படும் 'தளபதி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் நீண்ட வருடங்கள் கழித்து தற்போது 'தர்பார்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படி பல காரணங்களுக்காக அதிக எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.      

NEXT STORY