"தர்பார்" மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல், மோகன்லால், சல்மான் கான்!

சினிமா
Updated Nov 07, 2019 | 17:56 IST | சு.கார்த்திகேயன்

அனிருத் இசையில் உருவாகியுள்ள "தர்பார்" படத்தின் தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டா் வெளியாகியுள்ளது.

Darbar motion poster
தர்பார் மோஷன் போஸ்டா்  |  Photo Credit: Twitter

சென்னை: சூப்பா் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், மோகன்லால், சல்மான்கான் மற்றும் மகேஷ்பாபு ஆகியோர் இன்று வெளியிட்டனா்.

இயக்குநா் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் "தர்பாா்". இது ரஜினியின் 167 ஆவது படம் ஆகும். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாா் ரஜினிகாந்த். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளாா். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகா் பிரதீக் பப்பா் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனா். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளாா்.

வரும் பொங்கலுக்கு ரசிகா்களுக்கு விருந்தாக அமைய உள்ள தர்பாரின் மோஷன் போஸ்டா் மற்றும் தீம் மியூசிக் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. 

 

 

"தர்பார்" தமிழ் மோஷன் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டாா். மலையாள போஸ்டரை நடிகர் மோகன்லாலும், இந்தியில் நடிகர் சல்மான் கானும் வெளியிட்டுள்ளனா். தெலுங்கு மோஷன் போஸ்டரை மகேஷ் பாபு வெளியிட்டா். இதோடு அனிருத் அதிரடி இசையில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் தீம் மியூசிக்கும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், போலீஸ் உடையில் கத்தியுடன் வரும் ரஜினிகாந்த் ரவுடிகளை வெட்டி வீழ்த்துகிறாா். ரஜினியின் பெயர் 'ஆதித்யா அருணாச்சலம்' என பேட்ஜில் உள்ளது. இந்தக் காட்சிகளுக்கு பின்னணியில் தலைவா என்ற பீஜியம் அதிருகிறது. தர்பார் மோஷன் போஸ்டா் வெளியாகியைத் தொடர்ந்து #DarbarMotionPoster, #DarbarThiruvizha, #DarbarPongal ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

NEXT STORY