நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்

சினிமா
Updated Oct 07, 2019 | 10:39 IST | Zoom

'மருதமலை', ’ஆணை’ போன்ற பல திரைப்படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளுக்காக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி.

நடிகர் கிருஷ்ணமூர்த்தி, Actor Kishnamoorthy
நடிகர் கிருஷ்ணமூர்த்தி  |  Photo Credit: YouTube

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இன்று காலமானார். கேரள மாநிலம் குமுளியில் படப்பிடிப்பின் போது இன்று அதிகாலை 4:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் உயிர் பிரிந்தது.

’தவசி’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு உடன் சேர்ந்து இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் பிரசித்தி பெற்றவை ஆகும். தொடர்ந்து வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்த கிருஷ்ணமூர்த்தி, 50-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

'நான் கடவுள்' உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் தோன்றி தனது திறமையை வெளிக்காட்டியிருந்தாலும் 'மருதமலை', ’ஆணை’ போன்ற பல திரைப்படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளுக்காக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி.

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள 'கைதி' திரைப்படத்திலும் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். 55 வயதான கிருஷ்ணமூர்த்திக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் இறப்புக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களும் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...