'கோமாளி' படத்தின் இயக்குனருக்கு காரை பரிசாக அளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

சினிமா
Updated Sep 21, 2019 | 19:08 IST | Zoom

'கோமாளி' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு காரை பரிசாக அளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

'கோமாளி' இயக்குனருக்கு காரை பரிசாக அளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், 'Comali' producer gifts brand new Honda City car to director pradeep
'கோமாளி' இயக்குனருக்கு காரை பரிசாக அளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்  |  Photo Credit: Twitter

'கோமாளி' படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் காரை பரிசாக அளித்துள்ளார்.  

புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'கோமாளி' படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார்.   வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்தனர். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி இப்படம் வெளியானது. 90-களில் கோமாவுக்கு சென்ற ஒருவர் தற்போது கண்முழித்தால் என்ன நடக்கும், என்ற கதையுடன் உருவாகிய இப்படம் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்றது. ஜெயம் ரவியின் முந்தைய வெற்றி படங்களின் வசூலை இப்படம் முறியடித்தது.

இந்நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு புதிய ஹோண்டா சிட்டி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த காரை பரிசளிக்கும் போது, ஜெயம் ரவி மற்றும் அவரது மகன் ஆரவும் இருந்துள்ளனர். 

 

 

 

 

'கோமாளி' படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இப்படத்திற்கான ஹிந்தி ரீமேக் பற்றிய பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரிப்பாளர் போனி கபூர் வங்கியுள்ளதாகவும், அதில் அவரது மகன் அர்ஜுன் கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.            

NEXT STORY