எனது ஃபோனில் இருக்கும் ஒரே கேண்டிட் படம் - ரஜினி புகைப்படம் பற்றி சந்தோஷ் சிவன்

சினிமா
Updated Jun 09, 2019 | 11:28 IST | Twitter

சந்தோஷ் சிவன் ரஜினியின் தளபதி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth with Ved
Rajinikanth with Ved  |  Photo Credit: Twitter

தர்பார் ஷூட்டிஙில் இருந்த ரஜினியைப் பார்க்க சௌந்தர்யா ரஜினி தனது மகன் வேத்துடன் சென்றிருக்கிறார். அங்கே தாத்தா ரஜினியோடு வேத்தும் மானிட்டரைப் பாருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது சூப்பர்ஸ்டாரின் ட்167-வது திரைப்படமான தர்பார். இந்தப் படம் வரும் 2020-ஆண்டு பொங்கல் தினத்தன்று ரிலீஸாகவிருக்கிறது. இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதுவரை சந்திரமுகி, குசேலனில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகவும் சிவாஜி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சூப்பர்ஸ்டாருடன் நடனம் ஆடியிருக்கும் நயன்தாரா 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைவது குறிப்பிடத்தக்கது. பேட்ட படத்துக்கு இசையமைத்த அனிருத் இசையமைக்கிறார். 

லைக்கா தயாரிக்கும் இந்தப்படத்துக்கு தளபதி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது தாத்தா ரஜினியோடு வேத்தும் மானிட்டரைப் பாருக்கும் புகைப்படத்தை இவர்தான் தனது ஃபோனில் படம் பிடித்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் சந்தோஷ் சிவன், எனது ஐபோனில் இருக்கும் ஒரே கேண்டிட் படம் இதுதான். இருவரும் மானிட்டரைப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். 

 

 

இந்தப் புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மும்பையில் ஏப்ரல் மாதம் முதல் இதன் படபிடிப்பு நடந்து வருகிறது. அங்கே ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY