சாலை விபத்தில் சினிமா போட்டோகிராஃபர் ஸ்டில்ஸ் சிவா மரணம்! கொம்பன் நடிகர் தவசி படுகாயம்

சினிமா
Updated Sep 03, 2019 | 08:49 IST | Times Now

பிரபல சினிமா ஸ்டில்ஸ் போட்டோகிராஃபர் சிவா சாலை விபத்தில் உயிரிழந்தார். காமெடி நடிகர் தவசி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Comedy Thavasi injured in road accident
Comedy Thavasi injured in road accident  |  Photo Credit: Twitter

தேனி: பிரபல சினிமா ஸ்டில்ஸ் போட்டோகிராஃபர் சிவா தேனி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் கொம்பன் திரைப்படத்தில் நடித்த நடிகர் தவசி காயமடைந்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக தனியார் சேனலுக்காக டிவி சீரியல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கோம்பை ரெங்கநாதர் கோவில் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்து நேற்று இரவு போட்டோகிராஃபர் ஸ்டில்ஸ் சிவா மற்றும் நகைச்சுவை நடிகர் தவசி உள்பட 3 பேர் ஒரு காரில் தனியார் விடுதிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாரதவிதமாக அவர்கள் வந்த கார் நிலைதடுமாறி மலைச்சரிவில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நகைச்சுவை நடிகர் தவசி படுகாயமடைந்தார். அவருடன் பயணம் செய்த ஸ்டில்ஸ் போட்டோகிராஃபர் சிவா உயிரிழந்தார். நடிகர் தவசிக்கு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் தவசி கொம்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படங்களில் நடித்தவர். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆஸ்தான போட்டோகிராபராக பணியாற்றிவர் ஸ்டில்ஸ் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...