பிரபல இயக்குனர் மற்றும் சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் திடீர் மரணம்

சினிமா
Updated Sep 08, 2019 | 13:17 IST | Times Now

இயக்குனர் ராஜசேகர் ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். மேலும் சின்னத்திரை சங்கங்களில் அவர் பொறுப்பு வகித்து வந்தவர்.

cine Actor Rajasekar, சின்னத்திரை நடிகர் ராஜசேகர்
சின்னத்திரை நடிகர் ராஜசேகர்  |  Photo Credit: Twitter

சென்னை: பிரபல இயக்குனர் மற்றும் சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் நடித்த ஹீரோக்களில் ராஜசேகரும் ஒருவர். பிறகு மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்லப் பேசு, தூரம் அதிகமில்லை, கல்யாணக் காலம், பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை போன்ற திரைப்படங்களை தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து இயக்கி உள்ளனர்.

பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய ராஜசேகர் ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். மேலும் சின்னத்திரை சங்கங்களில் அவர் பொறுப்பு வகித்து வந்தவர்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால், தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...