வெளியானது காப்பான் படப் பாடல்கள்!

சினிமா
Updated Jul 21, 2019 | 22:48 IST | Zoom

இன்று நடைபெற்ற பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் காப்பான் பட பாடல்கள் வெளியாகின

Kaappaan sound track is out now
Kaappaan sound track is out now  |  Photo Credit: Twitter

இன்று நடைபெற்ற பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், சங்கர் அவர்கள் முன்னிலையில் காப்பான் படத்தின் பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. விழாவில் ரஜினிகாந்த், சங்கர் இவர்களோடு படத்தில் நடித்த ஆர்யா, சாயிஷா, மோகன்லால், சமுத்திரக்கனி,  போன்றோருடன் கார்த்தி, சிவக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா ஹாரீஸ் தான் பாடிய விண்ணின் விண்மீன்  பாடலைப் பாடினார். 

'அயன்', 'மாற்றான்' படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் மற்றும் நடிகர் சூர்யா மீண்டும் இணைத்துள்ள படம் 'காப்பான்'. சூர்யாவுடன் மோகன் லால், சயீஷா, ஆர்யா, சமுத்திரக்கனி, பூமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடந்து செந்தில் கணேஷ் மற்றும் ரமணி அம்மாள் பாடிய 'சிறுக்கி' என்ற பாடலும் வெளியானது. அதன்பிறகு குறிலே குழலே பாடலும் வெளியான நிலையில் இன்று இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியானின. படத்தின் பாடல்கள் இங்கே..

ரஜினி, சங்கர், மோகன்லால் பங்குபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழா! - ஹைலைட்ஸ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...