அனல் பறக்கும் அரசியல் வசனங்களுடன் வெளியானது ராஜூ முருகனின் ஜிப்ஸி டிரைலர் !

சினிமா
Updated May 20, 2019 | 15:42 IST | Zoom

ஒரு குரல்ல அடக்கனும்னு நினைச்சீங்கன்னா, ஓராயிரம் குரல் வெடிக்கும் போன்ற வசனங்கள் ஜிப்ஸி டிரைலரில் அதிக கவனம் பெறுகின்றது.

Gypsy Official Trailer
Gypsy Official Trailer  |  Photo Credit: YouTube

 சென்னை: ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ஜிப்ஸி படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

குக்கூ, ஜோக்கர் படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கி வரும் படம் ஜிப்ஸி.  இப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். இவர் மிஸ் ஹிமாச்சலப்பிரதேசம் பட்டம் வென்றவர்.

ஜிப்ஸி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளாா். செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தை அம்பேத் குமாா் தயாரித்துள்ளாா்.

check out here Gypsy Official Trailer

படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி நல்லவரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

 

ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே மொழி இதுதான் என் வாழ்க்கையின் லட்சியம் எனத் தொடங்குகிறது ஜிப்ஸி டிரைலர். ' ஒரு குரல அடக்கனும்னு நினைச்சீங்கன்னா, ஓராயிரம் குரல் வெடிக்கும், அப்பாவி மக்களோட மொழி, இனம், சாதி, மதம், நிலம், பசி, வலி, காதல் எல்லாத்தையும் அரசியல் ஆக்குறவனும், வியாபாரமாக்குறவனும் தான் நம்முட்டைய எதிரி, ஒருத்தன் சிந்துற ரத்தம் தான் இன்னொருத்தனுக்கு வெற்றி திலகம் இது தான் ராஜ நீதி ' போன்ற வசனங்கள் அதிக கவனம் பெறுகின்றது.

NEXT STORY
அனல் பறக்கும் அரசியல் வசனங்களுடன் வெளியானது ராஜூ முருகனின் ஜிப்ஸி டிரைலர் ! Description: ஒரு குரல்ல அடக்கனும்னு நினைச்சீங்கன்னா, ஓராயிரம் குரல் வெடிக்கும் போன்ற வசனங்கள் ஜிப்ஸி டிரைலரில் அதிக கவனம் பெறுகின்றது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles