இதனால்தான் இவர் ஆக்‌ஷன் கிங்! பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து அசத்திய அர்ஜுன் - வீடியோ

சினிமா
Updated Jul 04, 2019 | 11:29 IST | Zoom

இளம் நடிகர்களே இந்த சேலஞ்சை செய்யாத நிலையில், 54 வயது அர்ஜுனும் இதனைச் செய்திருக்கிறார்!

Arjun Sarja Bottlecap Challenge
அர்ஜுன் பாட்டில்கேப் சேலஞ்ச்  |  Photo Credit: Instagram

’பாட்டில் கேப் சேலஞ்ச்’ என்ற புதிய சேலஞ்சில் பிரபலங்கள் பாட்டிலில் உள்ள மூடிகளைக் கால்களால் உதைக்கும் வீடியோவை சமூக வலைதளங்களான டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அர்ஜுன் அட்டகாசமாக காலால் பாட்டிலை திறக்கும் வீடியோவைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

சமூக வலைதளங்களில் இது போன்ற சேலஞ்சுகள் இந்தியாவில் வைரல் ஆகத் தொடங்கியது ஐஸ் பக்கெட் சேலஞ்சுக்குப் பிறகுதான். அதன் பின் கிகி சேலஞ்ச், மொமொ சேலஞ்ச், 10 இயர் சேலஞ்ச் என இண்டர்நேஷனல் சேலஞ்சுகளும் தோசை சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ்ச் போன்ற உள்ளூர் சேலஞ்சுகளும் வைரல் ஆகின. இதுபோன்ற மற்றொரு சேலஞ்சுதான் ’பாட்டில் கேப் சேலஞ்ச்’. ஆனால் இது அனைவரும் செய்யக்கூடிய அளவுக்கு சாதரணமாக இல்லை. பாட்டிலில் உள்ள மூடிகளை கால்களால் உதைப்பதே பாட்டில் கப் சேலஞ்ச். இதனை வெற்றிகரமாகச் செய்து பிரபலங்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் புகழ்  ஜேசனும் இதனைச் செய்து பகிர்ந்திருந்தார்.

இந்த லேட்டஸ்ட் டிரண்டை முதலில் தொடங்கியது யுஎஃஏ குத்துச்சண்டை சாம்பியனான மேக்ஸ் ஹோலோவே. அவர் அவரது நண்பரைட் டேக் செய்து உன்னால் இதே போன்று செய்யவே முடியாது என்று சேலஞ்ச் செய்து அவர் செய்த வீடியோவைப் பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் இதேபோன்று பகிரப்பட்டு வருகின்றன. இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் இந்த பாட்டில் கப் சேலஞ்சை வெற்றிகரமாகச் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dedicated to my Boss Bruce and all my fans #bottlecapchallenge

A post shared by Arjun Sarja (@arjunsarjaa) on

 

அவரைத் தொடர்ந்து ஆக்‌ஷன் கின் அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் இதனை எனது குரு புரூஸ்லீக்கும் எனது ரசிகர்களுக்கும் டெடிக்கேட் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இளம் நடிகர்களே இந்த சேலஞ்சை செய்யாத நிலையில், 54 வயது அர்ஜுன் இதனைச் செய்திருக்கிறார் அதனால்தான் இவர் எங்கள் அக்‌ஷன் கிங் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

NEXT STORY
இதனால்தான் இவர் ஆக்‌ஷன் கிங்! பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து அசத்திய அர்ஜுன் - வீடியோ Description: இளம் நடிகர்களே இந்த சேலஞ்சை செய்யாத நிலையில், 54 வயது அர்ஜுனும் இதனைச் செய்திருக்கிறார்!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles