ஜெயலலிதா பயோபிக்கில் பணியாற்றும் பிரபல ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர்!

சினிமா
Updated Sep 12, 2019 | 17:21 IST | Zoom

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான 'தலைவி' படத்தில் பிரபல ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் பணியாற்றவுள்ளார்.

'தலைவி' படத்தில் பிரபல ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ், Captain Marvel fame Jason Collins to do prosthetics for jayalalitha's biopic 'Thalaivi'
'தலைவி' படத்தில் பிரபல ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ்   |  Photo Credit: Times Now

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான 'தலைவி' படத்தில் பிரபல ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் பணியாற்றவுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து பலரும் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று 'தலைவி' என்ற பெயரில் அவரது பயோபிக்கை இயக்கப்போவதாக அறிவித்தார். மேலும் அதனை தொடர்ந்து கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'கேப்டன் மார்வெல்', 'ப்ளேட் ரன்னர் 2049', 'தி மேஸ் ரன்னர்' போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் இப்படத்தில் பணியாற்றவுள்ளார்.

 

 

இப்படத்தில் ஜெயலலிதவின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் 4 லூக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக கங்கனா ரணாவத் தற்போது பரதநாட்டியம் மற்றும் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறார். மேலும் தீபாவளிக்கு பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 'பாகுபலி', 'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் கதாசிரியர் விஜேந்திர பிரசாத் இப்படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார்.     

இயக்குனர் கெளதம் மேனனும் ஜெயலலிதவின் வாழ்க்கை வரலாறை தழுவி 'குயின்' என்ற வெப் சீரிஸை உருவாகி வருகிறார். ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் இந்த வெப் சீரிஸின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இயக்குனர் ஏ.எல்.விஜய் தன் படத்திற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக அனுமதி பெற்றுள்ள நிலையில், கெளதம் மேனன் எந்த அனுமதியும் பெறவில்லை. இதனால் தீபக், தங்கள் குடுமபத்தினரிடம் அனுமதி பெறாமல் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறை படமாக்கினால் சட்டரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று கெளதம் மேனனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.                       

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...