வெளியானது விஜய் குரலில் தெறியான வெறித்தனம் பாடல்!

சினிமா
Updated Sep 01, 2019 | 18:20 IST | Zoom

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த விஜய் பாடிய பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் வெளியானது.

பிகில் வெறித்தனம் பாடல்
பிகில் வெறித்தனம் பாடல்  |  Photo Credit: Twitter

எதிர்பாத்தது போலவே பிகில் படத்தின் வெறித்தனம் பாடல், மாலை 6:00 மணிக்கு வெளியானது. வெளியான 10 நிமிடத்தில் சுமார் 5 லட்சம் வியூஸ் கடந்துள்ளது. 

வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் பிகில் படத்தின் முதல் பாடலான சிங்கப் பெண்ணே பாடல் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டைட்டில் சாங்கான வெறித்தனம் பாடல் ரிலீசானது. இந்தப் பாடலை முதன்முறையாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ளார். வட சென்னைக்கே உரித்தான மொழி நடையோடு இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இவருடன் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்ற பூவையாரும் பாடியுள்ளார். இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவோடு இந்த லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்தப் பாடல் வேறு ஒருவருடைய குரலில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது. 

 பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப்,  விவேக்,  பரியேறும் பெருமாள் கதிர், மொட்ட ராஜேந்திரன், டேனியல் பாலாஜி, யோகிபாபு, இந்துஜா, ரெபா மோனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். மெர்சல், சர்க்காரைத் தொடர்ந்து இந்தப் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. 

NEXT STORY
வெளியானது விஜய் குரலில் தெறியான வெறித்தனம் பாடல்! Description: விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த விஜய் பாடிய பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் வெளியானது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles