வாவ்! முதன்முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடப் போகிறார்! - Bigil Update

சினிமா
Updated Jul 11, 2019 | 22:55 IST | Zoom

நடிகர் விஜய் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடவிருக்கிறார்.

Bigil vijay
Bigil vijay  |  Photo Credit: Twitter

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று மற்றுமொரு அப்டேட் வந்துள்ளது. அது முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடவிருக்கிறார் என்பதே! 

சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், என்னை ஏ.ஆர்.ரஹ்மான் பாடச் சொன்னார் நான் தான் இவ்வளவு பெரிய ஒரு இசையமைப்பாளரின் இசையில் பாடும் அளவுக்கு நல்லப் பாடகன் அல்ல என்று கூறி மறுத்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் ரசிகர்கள் சர்கார், மெர்சல் படத்தில் விஜய் பாடாதது ஒரு பெரிய குறை என்றே கூறிவந்தார்கள். ஏனென்றால் விஜய் தனது படங்களில் ஏதேனும் ஒரு பாட்டை பாடிவிடுவார். அது கூகுள் கூகுள் போன்ற பெப்பி நம்பரோ, கண்டாங்கி என்ற மெலடி நம்பரோ... கடைசியாக பைரவா படத்தில் பாப்பா, பாப்பா பாடல் பாடி இருந்தார். அதன் பிறகு வெளியான மெர்சல், சர்கார் இரண்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசை. ரஹ்மானின் இசையில் பாடுவது எவ்வளவு பேருக்குக் கனவாக இருக்கும், ஆனால் ரஹ்மானே கேட்டும் விஜய் பாடவில்லை. இந்நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் பிகில் படத்தில் விவேக் பாடல் எழுத, ரஹ்மான் இசையில் விஜய் பாடுவதற்கு ஒப்புக் கொண்டுவிட்டார். இதுதான் இந்தப்படத்தின் முதல் சிங்கிள், பாடலின் பெயர் வெறித்தனம் என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். 

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், அவர்களுடன் இணைந்து கதிர், விவேக், இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் தீபாவளிக்கு இந்தப்படம் ரிலீஸாகவிருக்கிறது!

NEXT STORY
வாவ்! முதன்முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடப் போகிறார்! - Bigil Update Description: நடிகர் விஜய் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடவிருக்கிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles