பெண்களை பெருமைப்படுத்தும் பிகில் 'சிங்கப்பெண்ணே' பாடல் அதிகாரப்பூர்வ வெளியீடு

சினிமா
Updated Jul 23, 2019 | 22:49 IST | Zoom

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் முதல் பாடலை அதிகாரப்பூர்வமாக படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

'Singa Penney' from Vijay's 'Bigil'
'Singa Penney' from Vijay's 'Bigil'  |  Photo Credit: YouTube

இயக்குநர் அட்லீயையும், நடிகர் விஜயையும் மூன்றாவது முறையாக இணைத்துள்ள படம் 'பிகில்'.  ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் ட்ரீட் ஆக அமைந்தது. விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பதாலும், 'வெறித்தனம்' என்ற பாடலை அவரே பாடி உள்ளார் என்ற தகவலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதிலும் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி 'பிகில்' உருவாகியுள்ளது.

இதற்கிடையில் 'பிகில்' படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. 'சிங்கப்பெண்ணே' எனத் தொடங்கும் பாடல் முழுமையாக இணையத்தில் லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் விஜய் ரசிகர்களும் கடுப்பாகி போகினர். இதையடுத்து சிங்கப்பெண்ணே பாடல் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. 

இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் இன்று இரவு 10 மணிக்கு சிங்கப்பெண்ணே பாடல் லிரிக்கள் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வைர வரிகளில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. சிங்கப்பெண்ணே பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரிலும் #Singappenney என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 


 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...