வெறித்தனம் ஓவர்லோடெட்....வெளியானது 'பிகில்' புதிய போஸ்டர்!

சினிமா
Updated Sep 17, 2019 | 19:55 IST

கால்பந்து ஜெர்சி, லுங்கி மற்றும் கையில் கத்தியுடன் 'பிகில்' படத்தின் புதிய போஸ்டரில் விஜய் மிரட்டலாக உள்ளார்.

'பிகில்' படத்தின் புதிய போஸ்டர்,'bigil' movie new poster released
'பிகில்' படத்தின் புதிய போஸ்டர்  |  Photo Credit: Twitter

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும்  'பிகில்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் 'பிகில்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நயன்தாரா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்துஜா, கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ், ஜாக்கி ஷெராப், விவேக் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 'பிகில்' படத்தில் இருந்து 'சிங்கப்பெண்ணே' மற்றும் 'வெறித்தனம்' பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து தற்போது இசை வெளியீட்டு விழாவை குறிக்கும் வகையில் மீண்டும் ஒரு புதிய போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. கால்பந்து ஜெர்சி, லுங்கி மற்றும் கையில் கத்தியுடன் விஜய் போஸ்டரில் மிரட்டலாகவுள்ளார்.   

 

 

அதே சமயத்தில் படத்தின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா தான் உருவாக்கிய ஒரு பேன் மேட் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். 'கத்தி' போஸ்டர் பாணியில் பல வண்ணங்களுடம் விஜய் கையில் சங்கிலியுடன் இருக்கும் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியான போஸ்ட்டரை விட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

'பிகில்' படத்திற்கு தொடர்ந்து அப்டேட் வருவதில் தாமதம் ஏற்படுவதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்த வருகின்றனர். மேலும் 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலையில் ஒளிபரப்பபடாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாரநாளில் இசை வெளியீட்டு விழா நடப்பதால் அதனை நேரலையில் ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.           

    

NEXT STORY