இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு டெல்லி செல்லும் 'பிகில்' படக்குழு !

சினிமா
Updated Jul 22, 2019 | 18:53 IST | Zoom

'பிகில்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லி நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Bigil
பிகில்  |  Photo Credit: Twitter

'பிகில்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் டெல்லியில் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைத்துள்ள படம் 'பிகில்'. அப்பா மகன் என்று இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார் என்று தெரிவிக்கும் படி போஸ்டர்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் அவர் கால்பந்து வீரராகவும் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராகவும் நடித்துள்ளார்.

'பிகில்' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் சென்னை ஓ.எம்.ஆரில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய், நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு டெல்லி செல்லவுள்ளது. டெல்லியில் உள்ள பிரபல கால்பந்து மைதானத்தில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இதில் நடிகர் விஜய், இந்துஜா, ரேபா மோனிகா ஜான் மற்றும் கால்பந்து அணியை சேர்ந்த பிற நடிகைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த  படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து படத்தின் ரிலீஸுக்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பிகில்' படத்தின் முதல் சிங்கிளான 'சிங்கப்பெண்னே' அதிகாரப்பூர்வமாக நாளை வெளியாகும் நிலையில், அதனை தொடர்ந்து டீஸர் ட்ரெய்லர் அடுத்தடுத்து வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பிகில்' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.     
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...