20 லட்சம் லைக்குகள் குவித்த பிகில்; சென்சாரில் U/A... ரிலீஸ் தேதி விரைவில்!

சினிமா
Updated Oct 16, 2019 | 11:29 IST | Times Now

பிகில் படத்தின் தணிக்கை பணிகள் முடிந்துவிட்டதாகவும், வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

Vijay, Shah Rukh Khan, விஜய், ஷாருக்கான்
விஜய், ஷாருக்கான்  |  Photo Credit: YouTube

சென்னை: விஜய் நடிக்கும் ’பிகில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் 20 லட்சம் லைக்குகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வெளியான சில நாட்களிலேயே இந்த சாதனையை படைத்ததன் மூலம், பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ஜீரோ திரைப்படத்தின் ட்ரெய்லருக்கு அடுத்தபடியாக அதிக லைக்குகளை பெற்ற இந்திய திரைப்படத்தின் டீசர் என்ற பெருமை பிகில் ட்ரெய்லருக்கு கிடைத்தள்ளது.

இந்நிலையில், பிகில் படத்தின் தணிக்கை பணிகள் முடிந்துவிட்டதாகவும், வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். பொதுவாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் அன்றுதான் திரைக்கு வரும். ஆனால் இந்த முறை தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் படத்தை வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமையே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ட்விட்டரில் #2MLikesForBigilTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 2 நிமிடம் 41 நொடிகள் ஓடும் பிகில் ட்ரெய்லர் யூடியூபில் சுமார் 3 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பிகில் ட்ரெய்லரை பாராட்டி ஷாருக்கான் ட்வீட் செய்திருந்தார். ஹிந்தியில் தாம் நடித்த ’சக் தே இந்தியா’ படத்தை போல பிகில் இருப்பதாக தனது ட்வீட்டில் ஷாருக்கான் கூறினார். அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக செய்திகள் வலம் வரும் வேளையில் தற்போது ஷாருக்கானின் ஜீரோ படத்தின் சாதனையை பிகில் நெருங்கியுள்ளது.

 

 

பெண்கள் கால்பந்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் ’வெறித்தனம்’ பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். நீண்ட காலத்திற்கு பிறகு விஜய்யுடன் ’லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படும் நயன்தாரா ஜோடியாக இணைகிறார்.தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் ட்ரெய்லர் நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளியாகி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரது வரவேற்பையும் பெற்று வருகிறது.

NEXT STORY