வெறித்தனமான அப்டேட்....19-ம் தேதி 'பிகில்' இசை வெளியீட்டு விழா !

சினிமா
Updated Sep 12, 2019 | 12:22 IST | Zoom

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியான கருத்துக்களை பேசி வருவதால், இம்மமுறையும் அதனை எதிர்பார்த்து விஜயின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.    

செப்டம்பர் 19-ஆம் தேதி 'பிகில்' இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது, Bigil Audio Launch on September 19
செப்டம்பர் 19-ஆம் தேதி 'பிகில்' இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது  |  Photo Credit: Twitter

'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் 'பிகில்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நயன்தாரா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்துஜா, கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ், ஜாக்கி ஷெராப், விவேக் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து முதலில் 'சிங்கப்பெண்ணே' என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் அதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் முறையாக நடிகர் விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடலும் வெளியாக அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதனை பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பத்தி கூறுகையில், இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் பேச்சினை கேட்க மிகுந்த ஆவளுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும், விழாவில் பல ஸ்வாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியான கருத்துக்களை பேசி வருவதால், இம்மமுறையும் அதனை எதிர்பார்த்து விஜயின் ரசிகர்கள் உட்பட அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.    
                

NEXT STORY