பொங்கலுக்கு சண்டை, கதறி அழும் மோகன் வைத்யா - இன்றைய பிக்பாஸ் ப்ரோமோஸ்

சினிமா
Updated Jun 25, 2019 | 15:35 IST | Zoom

மிகப்பெரிய இசைக் கலைஞர், எப்போதும் மிகவும் ஜாலியாக இருப்பவர், சாண்டி பண்ணிய அத்தனைச் சேட்டைகளையும் சிரித்துக்கொண்டே ரசித்தவர் திடீரென்று அழுவது பார்க்கவே சோகமாக இருக்கிறது.

Biggbosstamil season 3 day 2 promos
Biggbosstamil season 3 day 2 promos  |  Photo Credit: Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சி ஞாயிறன்று தொடங்கி ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். நேற்று பிக்பாஸ் மூன்றாது சீசனின் முதல் நாள் எபிசோட் துவங்கியது. முதல் நாள் என்பதால் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அனைவரும் ஒண்ணுமண்ணாக டான்ஸ் ஆடி சுற்றித்திரிந்தனர். நேற்று இரவு ஷெரீனிடம் தனக்கு கவினைப் பிடித்திருப்பதாக அபிராமி சொன்னதுதான் நேற்றைய வைரல். 

ஆனால் இன்றோ தலைகீழ். ப்ரோமோவில் எனக்குப் பொங்கல் பிடிக்காது நேற்று ஒரு நாள் கொடுத்தீர்கள் இன்றும் அதுவேவா என்று சாக்‌ஷி கேக்க, கேப்டன் வனிதாவோ பிடிக்காதா, ஒத்துக்காதா என்று சிபிசிஐடி ஆஃபீசர் போல கேள்வி கேட்டுகொண்டு இருக்கிறார். தன்னை பேசவிடாமல் வனிதா பேசுவது பிடிக்காமல் சாக்‌ஷி என்ன பேசவிடுங்களேன் என்று நீள்கிறது முதல் ப்ரோமோ.

 

 

அனைவரும் ஐய் அதுக்குள்ள சண்டையா என்று பார்க்க, இரண்டாவது ப்ரோமோவில் மோகன் வைத்யா எனக்கு என் பிரச்னைகளை, உணர்வுகளைச் சொல்லக்கூட யாரும் இல்லை என்று சிறுபிள்ளை போல் அழுது அதிர்ச்சி கொடுத்தார். மிகப்பெரிய இசைக் கலைஞர், எப்போதும் மிகவும் ஜாலியாக இருப்பவர், சாண்டி பண்ணிய அத்தனைச் சேட்டைகளையும் சிரித்துக்கொண்டே ரசித்தவர் திடீரென்று அழுவது பார்க்கவே சோகமாக இருக்கிறது. அவரது மனைவி காது கேளாதவர், வாய் பேச முடியாதவர். அவரது மகனும் அவ்வாறே. அதனால்தான் தனது மகனை விட்டு பிக்பாஸ் வீட்டுக்குள்ளே வரும்போது மேடையிலேயே அழுதார் மோகன். அவரது மனைவியும் இறந்துவிட்டதால், தனது சுக துக்கங்களைப் பரிமாற ஒரு சொந்தம் இல்லை என்று நினைத்திருப்பார் போலும். ஆனா எதற்காக அழுதார் என்பது இன்று நிகழ்ச்சியைப் பார்த்தால்தான் தெரியும். 

 

 இதுபோக கடைசியாக வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் யாரோ ஒருவர் வருகிறார். அப்போது ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஜாலியாக டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். ஏதோ டாஸ்க் போல!


 

 

NEXT STORY
பொங்கலுக்கு சண்டை, கதறி அழும் மோகன் வைத்யா - இன்றைய பிக்பாஸ் ப்ரோமோஸ் Description: மிகப்பெரிய இசைக் கலைஞர், எப்போதும் மிகவும் ஜாலியாக இருப்பவர், சாண்டி பண்ணிய அத்தனைச் சேட்டைகளையும் சிரித்துக்கொண்டே ரசித்தவர் திடீரென்று அழுவது பார்க்கவே சோகமாக இருக்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola