அபிராமிக்கு கவின் மேல லவ்வாம்! - கலகலப்பாகத் தொடங்கிய பிக்பாஸின் Day 1

சினிமா
Updated Jun 25, 2019 | 10:57 IST | Zoom

பிக்பாஸ் முதல் நாள் என்பதால் வானத்தைப்போல படம் போல லாலாலா பாடிக்கொண்டு இருந்தார்கள்!

Biggbosstamil season 3 - Day 1
Biggbosstamil season 3 - Day 1  |  Photo Credit: Twitter

பிக்பாஸின் மூன்றாவது சீசன் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கி, நேற்று முதல் எபிசோட் ஒளிபரப்பானது. ஏற்கனவே 2 சீசன்களையும் பார்த்துப் பழகியதால், அனைவரும் தங்களது ஒரிஜினல் முகங்களைக் காட்டாமல் விளம்பரப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் போல சிரித்தமுகத்துடனே வலம்வந்தனர். சென்ற சீசன்களைவிட இந்த முறை அதிக வாலிபர்களும் இளம் வயது பெண்களும் வந்திருப்பதால், முதல் நாளே காதல் க்ரஷ் என களைகட்டத் தொடங்கியது பிக்பாஸ்... நேற்றைய ஹைலைட்ஸ் இங்கே!

 1. காலையில் பேட்ட படத்தின் உல்லால்லா பாடலோடு நாள் தொடங்கியது. சென்ற முறை போல இல்லாமல் அனைத்து ஹவுஸ்மேட்டும் டான்ஸ் ஆடினர்.
 2. நீச்சல் குளத்தில் தண்ணீர் இல்லை என நினைத்து டான்ஸ் ஆடியபடியே உள்ளே இறங்கிய சாண்டி மாஸ்டர், அங்கே மழைத்தண்ணீர் இருந்தது தெரியாமல் வழுக்கி விழுந்ததால், தாடையில் தையல் போடப்பட்டது.
 3. நேற்று இந்த வாரத்துக்கான தலைவர், மற்ற டீம்களை பிரிக்க குலுக்கல் முறையில் க்யூ கார்டுக்கள் கொடுக்கப்பட்டது. அதில் வனிதா விஜயக்குமாருக்கு கேப்டன் கார்டு வர, இந்த வாரத்தின் கேப்டன் ஆனார்.
 4. வறட்சி காரணமாக பிக்பாஸ் வீட்டில் தண்ணீருக்கும் கேஸுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது என்று சொன்னதும் அனைவரும் கைத்தட்ட, இதற்கு நீங்க கைத்தட்டக் கூடாது சென்றாயன் என்று ஃபாத்திமா பாபு புரட்சி மோடுக்குச் செல்ல, பிக்பாஸ் எடுத்த நடவடிக்கைக்குதான் கைதட்டினோம் என்று சேரன் கூற ஐய் சண்ட என்று பார்த்தால் அப்படியே முடிந்துவிட்டது அந்த சீன்!
 5. கவின், சாண்டி, அபிராமி, ரேஷ்மா அனைவரும் சாக்‌ஷி அகர்வால் 16 காலணிகளைக் கொண்டு வந்திருப்பதைக் கலாய்த்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அபிராமி கவினைப் பார்த்த அந்த ரொமாண்டிக் லுக்குக்கு அர்த்தம் அப்போது புரியவில்லை, கடைசியில்தான் தெரிந்தது!
 6. இந்த சீசனின் எண்டர்டெய்னர் சாண்டி மாஸ்டர்தான். தாடையில் காயம் இருந்ததையே காமெடியாக்கி, கவினையும் லாஸ்வியாவையின் இதனை செய்தியாக்கச் சொல்லி ரணகளம் செய்தார்.
 7. அதன்பிறகும் மோகன் வைத்தியாவுக்கே சங்கீதம் சொல்லித்தருகிறேன் என்று பாட்டுப்பாடி ஓட்டினார்.
 8. இன்னொருபக்கம் தாங்கள் பாத்ரூம் க்ளீனிங்கில் சேர்ந்ததால் ஷெரீன், கவின், சாக்‌ஷி, தர்ஷன் பாத்ரூம் க்ளீனிங் பற்றி பாடல் பாடி தங்களையே ஓட்டிக்கொண்டிருந்தனர். அவர்களுடனும் சாண்டிதான் பர்ஃபார்மன்ஸ்! ஆனா அதை கிட்சன்லயாப்பா பண்ணுவீங்க?
 9. பின் அனைவருக்கும் ஒரு போட்டி கொடுக்கப்பட்டது. 2 டீம்களாகப் பிரிந்து மற்றொரு டீம் சொல்வதை செய்ய வேண்டும் என்பது. யாரும் மிகவும் சீரியஸாகக் கேள்விகேக்காமல் ஜாலியாகவே கேள்விகேட்டு வானத்தைப் போல டைப்பில் போனது அந்தப்போட்டி, ஆனால் மதுமிதா பட்டப்பெயர் வைக்க வேண்டும் என்று போட்டி வர வனிதாவுக்கு சொர்ணாக்கா தங்கச்சி பீர்கங்கா எனக்கூற வனிதா டென்ஷன் ஆனது முகத்தில் தெரிந்தது... எலிமினேஷன் அன்று தெரியும்!
 10. மதியம் கேப்டனும் சேர்ந்து தூங்க, இந்த முறை நாய் கத்தும் சத்தம் இல்லாமல் துப்பாக்கி சத்தம் போடப்பட்டது. அதில் இவர்களுக்கு பெருமை வேறு.
 11. மாலையில் எதிர்பார்த்தபடியே மோகன் வைத்தியாவின் கச்சேரி ஆரம்பமானது. அவர் கார்டனில் சின்னஞ்சிறு கிளியே என்று ஆரம்பிக்க, பாத்ரூம் ஏரியாவில் கவின், ஷெரீன், ஷாக்‌ஷி பார்ட்டி பாடல்களைப் பாடி குத்தாட்டம் போட்டனர்.
 12. இறுதியில் இரவு அனைவரும் தூங்கப்போனதும் அபிராமி, கவின் தன்னுடைய நீண்ட நாள் க்ரஷ், அவனை இங்கே சந்திப்பேன் என்று நினைக்க இல்லை. செம க்யூட், ஆட்டிடியூடே காட்டாத பையன் என்று தனது காதலை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது சாக்‌ஷியும் வர, நீ காதலைச் சொல்லுபோது நாங்கள் பின்னால் வெள்ளை உடை அணிந்து லாலாலா பாடுவோம் என்று ஓட்டிக் கொண்டிருந்தனர். அதோடு நேற்றைய நாள் நிறைவடைந்தது.

kavin abirami

தொடங்கியது பிக்பாஸ் சீசன் 3, பல தெரியாத முகங்கள், யார் இவர்கள்? - முழூ விவரம்

 

NEXT STORY
அபிராமிக்கு கவின் மேல லவ்வாம்! - கலகலப்பாகத் தொடங்கிய பிக்பாஸின் Day 1 Description: பிக்பாஸ் முதல் நாள் என்பதால் வானத்தைப்போல படம் போல லாலாலா பாடிக்கொண்டு இருந்தார்கள்!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles