Biggboss Tamil Success Party: சொன்ன சொல் தவறாத கமல்... பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஃபோனை பரிசாக வழங்கினார்!

சினிமா
Updated Mar 24, 2019 | 20:06 IST | Instagram

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 இறுதி நாளன்று மகத் தங்களுக்கும் ஃபோன் வேண்டும் என்று கேட்டபோது கமல் நான் உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

kamalhaasan gifted smartphones to biggboss contestants
பிக்பாஸ் தமிழ் சீசன் 2 சக்ஸஸ் பார்ட்டி  |  Photo Credit: Instagram

பிக்பாஸ் தமிழின் சீசன் 2 சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த முறை 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு சிம்புவுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள், ஜனனி, ரித்விகா, மகத், ஐஸ்வர்யா மற்றும் சீசன் ஒன் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒன்றாக செக்க சிவந்த வானம் திரைப்படத்துக்கு சென்ற படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார்கள்.

அதன்பிறகு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான சக்ஸஸ் பார்ட்டி தற்போது சென்னையின் பிரபல ஸ்டார்ஹோட்டலில் நடைபெற்றிருக்கிறது. இதில் மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா, மமதி , அனந்த் வைத்தியநாதன் தவிர மற்ற ஹவுஸ்மேட்ஸுடன் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனும் பங்குகொண்டுள்ளார்.

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#biggboss #reunion #successparty

A post shared by Mahat Raghavendra (@mahatofficial) on

 

நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மூன்றாம் நான்காம் இடம் பெற்ற ஜனனி மற்றும் விஜயலக்‌ஷ்மிக்கு வீவோ சார்பாக ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டது. அப்போது மகத் தங்களுக்கும் போன் வேண்டும் என்று கேட்க, கமல் நான் உங்களுக்கு தருகிறேன் என்று கூறியிருந்தார். சொன்னபடியே இந்த சக்ஸஸ் பார்ட்டியில் 26000 மதிப்புள்ள போனை அனைத்து ஹவுஸ்மெட்ஸுக்கும் கொடுத்திருப்பார் போல, நித்யா தனது மகளுக்கு கமல் சார் கொடுத்த அன்பு பரிசு என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார். போலவே ஜனனியும் சொன்னசொல் தவறாதவர் என்று கமல் ஆட்டோகிராஃப் போட்ட மொபைல் ஃபோனை இன்ஸ்டா ஸ்டேடஸாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
Biggboss Tamil Success Party: சொன்ன சொல் தவறாத கமல்... பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஃபோனை பரிசாக வழங்கினார்! Description: பிக்பாஸ் தமிழ் சீசன் 2 இறுதி நாளன்று மகத் தங்களுக்கும் ஃபோன் வேண்டும் என்று கேட்டபோது கமல் நான் உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்று கூறினார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles