என்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறிய போட்டியாளர் இவர்தானா?

சினிமா
Updated Jul 06, 2019 | 15:50 IST | Zoom

அவரால் எந்த ஒரு பரபரப்புக் காட்சியும் நடைபெறவில்லை என்பதால் மக்களே அவரை வெளியேற்றி இருக்கலாம், அல்லது சானல் தரப்பே வெளியேற்றி இருக்கலாம்.  

biggboss tamil season 3
பிக்பாஸ் நாமினேஷன்  |  Photo Credit: Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சென்ற மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்கிவருகிறார். முதல் வாரம் என்பதால் யாரையும் வெளியேற்றாமல் இரண்டாவது வாரமான இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று கமல் அறிவித்திருந்தார். மேலும் 15 போட்டியாளர்கள் முதல் நாள் உள்ளே சென்றுவிட, மீரா மிதுன் மட்டும் இரண்டு நாட்கள் கழித்து சென்றார். அதனாலும் நாமினேஷன் நடைபெறவில்லை.

சென்ற சீசன் எல்லாம் நான்கில் இருந்து ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே நாமினேஷன் பட்டியலில் இருப்பர். ஆனால் இந்த முறை ஏழு பேர் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர். சரவணனன், ஃபாத்திமா பாபு, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, மீரா மிதுன், சேரன், கவின் ஆகியோர் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலானோர் மீரா மிதுன் தான் வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தனர். 

இன்று காலை கமல் பங்குபெறும் வார இறுதி நிகழ்ச்சி ஷூட்டிங் செய்து முடிக்கப்படும். அப்போது உள்ளிருக்கும் பார்வையாளர்கள் பலரால் யார் இந்த வாரம் வெளியேற்றப் பட்டார்கள் என்று கசிந்து விடும். சென்ற சீசன்கள் எல்லாம் புகைப்படம் எடுத்து பகிரப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலாகியது. அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்பட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவத் தொடங்கியுள்ளது. அது நாம் எதிர்பார்த்த மீரா மிதுன் அல்ல, பாத்திமா பாபுவாம்.

பாத்திமா பாபுவைப் பொருத்தவரை பெரும்பாலும் ஒருவரிடமும் சண்டை போடாமல், வீட்டுக்கு ஒரு அம்மாவாகத்தான் எல்லோரிடத்திலும் பழகி வருகிறார். ஆதனால் அவரால் எந்த ஒரு பரபரப்புக் காட்சியும் நடைபெறவில்லை என்பதால் மக்களே அவரை வெளியேற்றி இருக்கலாம், அல்லது சானல் தரப்பே வெளியேற்றி இருக்கலாம்.  

எப்படியும் மீரா மிதுனை முதல் நான்கைந்து வாரங்களுக்கு வெளியேற்ற மாட்டார்கள். ஒற்றுமையாக இருந்த வீடு அவர் வந்த பிறகுதான் சண்டை போடும் மைதானமானது என்பதால் மீரா மிதுன் வெளியேற வாய்ப்பு இல்லை. பாத்திமா பாபு இன்று வெளியேற்றப்பட்டார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது உண்மையா என்று இன்று வெளியாகும் நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்

NEXT STORY
என்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறிய போட்டியாளர் இவர்தானா? Description: அவரால் எந்த ஒரு பரபரப்புக் காட்சியும் நடைபெறவில்லை என்பதால் மக்களே அவரை வெளியேற்றி இருக்கலாம், அல்லது சானல் தரப்பே வெளியேற்றி இருக்கலாம்.  
Loading...
Loading...
Loading...