மேடையேறிய கவின்; முதலில் காப்பாற்றப்பட்டு ஃபினாலே செல்லும் ஹவுஸ்மேட் - பிக்பாஸில் இன்று!

சினிமா
Updated Sep 28, 2019 | 18:08 IST | Zoom

இந்த வார கமல்ஹாசன் பங்குபெறும் நிகழ்ச்சியில் பாதில் வெளியேறிய கவின் மேடையேறி பேசி உள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 3 இன்று
பிக்பாஸ் தமிழ் 3 இன்று  |  Photo Credit: Twitter

இந்த வாரம் பிக்பாஸில் காப்பாற்றப்படுபவர் அனைவரும் நேரடியாக ஃபைனல்ஸ் சென்றுவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 அடுத்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது. 17 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் தற்போது இந்த வாரம் 6 பேர் மட்டுமே இருக்கிறார்கள். சென்ற வாரம் சேரன் வெளியேறிய பிறகு செரின், கவின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், முகேன் ஆகியோர் இருந்த நிலையில், பிக்பாஸ் 5 லட்ச ரூபாயுடன் யாராவது இப்போதே வெளியேறலாம் என்று கூற யாரும் எதிர்பாராத விதமாக கவின் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறினார். 

 

 

இந்நிலையில் கவினுடன் சேர்த்து இந்த வாரம் நாமினேஷன் அடிப்படையில் வார இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவார். இன்று சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கவின் மேடையில் வந்து பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் இன்று காப்பாற்றப்படுபவர்கள் அனைவருமே ஃபினாலே வாரத்துக்கு சென்றுவிடுவார்கள். ஏற்கனவே முகேன் ஃபினாலே செல்வதற்கான கோல்டன் டிக்கெட்டை வென்று நேரடியாக சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று முதலில் சாண்டி காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. அவர் தவிர தற்போது செரின், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோரில் இருந்து ஒருவர் இன்று வெளியேற்றப்பட விருக்கிறார். 

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...