இரு கிராமங்களாக பிரிந்த பிக்பாஸ் வீடு, பஞ்சாயத்தில் கடுப்பான நாட்டாமை சேரன் !

சினிமா
Updated Jul 23, 2019 | 17:33 IST | Zoom

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் இரு கிராமங்களாக பிரிந்துள்ளதை குறிக்கும் ப்ரோமோக்கள் வெளியாகுயுள்ளது.

Bigg Boss 3
பிக்பாஸ் சீசன் 3   |  Photo Credit: Twitter

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி 29 நாட்களை கடந்துள்ளது. 30-வது நாளான இன்று, பிக்பாஸ் வீட்டினர் இரு கிராமங்களாக பிரிந்துள்ளனர். இதனை குறிக்கும் வகையில் சுவாரஸ்யமான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.

முதலில் வந்த ப்ரோமோவில் வீட்டில் உள்ளவர்கள் பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளனர். அனைவரும் பாரம்பரிய கிராமத்து உடைகளை அணிந்து அதற்கேற்ப ஒப்பனை செய்துள்ளனர். இவர்களுக்கு சேரன் தான் நாட்டாமை போல. மேலும் யாரவது சாப்பிட வேண்டும் என்றால் எதிர் கிராமத்தினர் கொடுக்கும் டாஸ்கை செய்ய வேண்டும். 

 

 

அடுத்ததாக வெளியான ப்ரோமோ தான் ஹைலைட். பிக்பாஸ் பஞ்சாயத்து செய்யும் படி டாஸ்க் கொடுத்தால், டாஸ்கில் பஞ்சாயத்து வந்துவிட்டது. மீரா மிதுன் கத்தி பேச, அவரிடம்  நாட்டாமை சேரன் சத்தம் போட்டார். தன்னை காயப்படுத்தும் படி பேச வேண்டாம் என்று மீரா கூற வீட்டுக்குள் ஒரு பிரளயமே வந்துவிட்டது. வீட்டில் பெரும்பாலும் சாந்தமாக இருந்து வரும் சேரன், இந்த பிரச்சனையால் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.

 

 

பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தாலும் இது மட்டும் மாறுவதில்லை. காதல் மன்னன் கவினின் லீலைகள் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தொடங்கிவிடும் போல. சில நாட்களுக்கு முன் சாக்ஷிக்கும் கவினுக்கு சண்டை ஆன நிலையில் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. பின் பிரச்சனை சுமுகமாக முடிந்து இருவரும் வழக்கம் போல் பேசிக்கொள்ள தொடங்கிவிட்டார்கள். இன்று வெளியான ப்ரோமோவில் சாக்ஷி கருப்பு நிற உடை அணிய, கவினும் ஈரத்தில் இருந்த கருப்பு சட்டையை காயவைக்க தொடங்கிவிட்டார். இதனை வீட்டில் இருந்தவர்கள் கிண்டல் செய்ய கவின் தன் சாக்ஷியிடம் தன் ரொமான்ஸை தொடங்கிவிட்டார்.  

 

     

 

இவ்வாறு வெளியான மூன்று ப்ரோமோக்களும் சுவாரஸ்யமாக இருக்கும் நிலையில் இன்று வேறு என்னலாம் நடக்க போகிறது என்று இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும்.   

            

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...