[PHOTOS] பிரபல சீரியல் நடிகரை மணந்து கொண்டார் பிக்பாஸ் ரம்யா!

சினிமா
Updated Sep 17, 2019 | 13:38 IST | Zoom

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னணி பாடகி என்.எஸ்.கே ரம்யா, விஜய் டி.வி-யில் 'நீலக்குயில்' சீரியலில் நடித்த சத்யாவை திருமணம் செய்துக் கொண்டார்.

பின்னணி பாடகி என்எ.ஸ்.கே ரம்யா திருமணம், Playback Singer NSK Ramya married to television actor sathya
பின்னணி பாடகி என்எ.ஸ்.கே ரம்யா திருமணம்  |  Photo Credit: Instagram

பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற பாடகி என்.எஸ்.கே ரம்யா பிரபல சீரியல் நடிகர் சத்யாவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். 

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தியான என்.எஸ்.கே ரம்யா திரைப்படங்களில் பின்னணி பாடகியாக உள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராகவும் பங்கேற்றார். அவரின் குணத்திற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் விளையாடிய விதத்திற்கும் சென்ற சீசனில் பலரும் அவருக்கு ஆதரவு தந்தனர். இருப்பினும் அவரால் இறுதிவரை சென்று போட்டியில் வெல்ல முடியவில்லை. இந்நிலையில் தற்போது அவர் பிரபல சீரியல் நடிகரான சத்யாவை திருமணம் செய்துக் கொண்டார்.

 

 

இவரது கணவர் சத்யா விஜய் டி.வி-யில் ஒளிபரபான 'நீலக்குயில்' சீரியலில் கதாநாயகனாக நடித்தவர். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. 

NSK Ramya

NSK Ramya

இந்த திருமண விழாவில் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் ஜனனி ஐயர் மற்றும் மும்தாஜ் பங்கேற்றனர். இவர்களோடு தற்போதைய சீசனின் பங்குபெற்றுள்ள தர்ஷனின் தோழி சனம் செட்டியும் பங்கேற்றுள்ளார். தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தோடு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

To the beginning of all things beautiful God bless @ramyansk and @sathya_actor ??????@jananiiyer ??? #mumtaz #Mumtazfamily

A post shared by Mumtaz (@mumtaz_mumo) on

 

இவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகிவருகிறது.   

NEXT STORY
[PHOTOS] பிரபல சீரியல் நடிகரை மணந்து கொண்டார் பிக்பாஸ் ரம்யா! Description: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னணி பாடகி என்.எஸ்.கே ரம்யா, விஜய் டி.வி-யில் 'நீலக்குயில்' சீரியலில் நடித்த சத்யாவை திருமணம் செய்துக் கொண்டார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles