முகேனிடம் காதலைக் கூறிய அபி, சாக்‌ஷியால் விழுந்த கவின், ஆண் ஹவுஸ்மேட்ஸ்களாக மாறிய பெண்கள் - இன்றைய ப்ரோமோக்கள்

சினிமா
Updated Aug 07, 2019 | 16:11 IST | Zoom

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோக்களைப் பற்றிய தொகுப்பு இங்கே

Biggboss Tamil promos on August 7
Biggboss Tamil promos on August 7  |  Photo Credit: Twitter

தினம் தினம் அழுகாச்சியாகாவும் சண்டை சச்சரவாலும் போர் அடிக்கும் பிக்பாஸ் திடீரென்று சரவணன் வெளியேறியதால் மேலும் சோகமானது. திங்கட்கிழமை சரவணன் வெளியேறியதைக் காட்டினாலும் நேற்றும் அவர் இடம்பெற்ற காட்சிகள் ஒளிபரப்பானது. அதில் அடுத்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருந்து விடுபடவும் லக்‌ஷரி பட்ஜெட்டுக்காகவும் பிக்பாஸ் ஒரு பெரிய டாஸ்கைக் கொடுத்தார். இந்த சீசன் தொடங்கி பாப்பம்பட்டி - கீரிப்பட்டி டாஸ்க், போடு ஆட்டம் போடு என்று ஜாலியாக டாஸ்குகள் இருந்தாலும் சீரியஸான டாஸ்குகள் இன்னும் தொடங்கவில்லை. 

நேற்று இந்த டாஸ்கின் ஒரு பகுதியாக வெளியில் இருந்து தூக்கிப் போடும் காயின்களைப் பிடிக்கவேண்டும் என்று கொடுக்கப்பட்டது. அதன் பிறகுதான் சரவணன் வெளியே சென்ற விஷயம் நடந்தது. அதன் பின் டாஸ்க் நடத்தப்படவில்லை. இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அந்த டாஸ்கின் 2வது பகுதியாக இருவர் குழுக்களாகப் பிரிந்து அனைவரும் விளையாடுகிறார்கள். இதில் மோகன் வைத்யா, வனிதா, சாக்‌ஷி பங்கேற்ற கேப்டன் டாஸ்க் போலவே, சிகப்பு காயின் யார் சட்டையில் ஒட்டி இருக்கிறதோ அவர்களது பாயிண்டுகளில் பாதி மற்றவருக்கு சென்றுவிடும். இதனால் அனைவரும் அடித்துக் கொண்டும் பிடித்துக் கொண்டும் விளையாடுகிறார்கள். ஒரு ஃப்ரேமில் சாக்‌ஷி துரத்த கவின் கீழே விழுகிறார். சேரனுக்கு அடிபட்டு கீழே படுத்துக்கிடக்கிறார். மிகவும் சீரியஸாக விளையாடுகிறார்கள் என்பது இந்த ப்ரோமோவைப் பார்க்கும்போது தெரிகிறது.

 

 

அடுத்த ப்ரோமோவில் அபிராமி முகேனிடம் ஐ லவ் யூ என்று கூறுகிறார். இதற்கு முகேன் என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று கூற அதற்கு அபிராமி நான் உன்னை பதில் சொல்லச் சொல்லவில்லையே, எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது அவ்வளவுதான் என்று கூறுகிறார். பேக்ரவுண்டில் ரஹ்மானின் ரொமாண்டிக் பி.ஜி.எம் வேறு... இதற்கு இல்லையா சார் ஒரு எண்டு?!

 

மூன்றாவது ப்ரோமோவில் பெண் ஹவுஸ்மேட்ஸ்கள் ஆண் ஹவுஸ்மேட்ஸ்கள் போல வேடமணிந்து அவர்களை போல நடித்துக் காட்ட வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப் பட்டுள்ளது. இதில் செரீன் கவின் போலவும், சாக்‌ஷி சாண்டி போலவும், மதுமிதா சேரன் போலவும், அபிராமி முகேன் போலவும் வேடமணிந்து நடிக்கிறார்கள். 

 

 

NEXT STORY
முகேனிடம் காதலைக் கூறிய அபி, சாக்‌ஷியால் விழுந்த கவின், ஆண் ஹவுஸ்மேட்ஸ்களாக மாறிய பெண்கள் - இன்றைய ப்ரோமோக்கள் Description: இன்றைய பிக்பாஸ் ப்ரோமோக்களைப் பற்றிய தொகுப்பு இங்கே
loadingLoading...
loadingLoading...
loadingLoading...