பிக்பாஸ் சரவணனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய தமிழக அரசு!

சினிமா
Updated Sep 11, 2019 | 16:37 IST | Zoom

சமீபத்தில் கலைமாமணி விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் சரவணனுக்கு தமிழக அரசு சார்பில் தமிழ் படங்களுக்கு மானியம் வழங்கும் குழுவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் தமிழ் படங்களுக்கு மானியம் வழங்கும் குழுவில் சரவணனுக்கு முக்கிய பொறுப்பு, biggboss fame saravanan appointed in tamilnadu film subsidy council
தமிழக அரசு சார்பில் தமிழ் படங்களுக்கு மானியம் வழங்கும் குழுவில் சரவணனுக்கு முக்கிய பொறுப்பு  |  Photo Credit: Twitter

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கும் குழுவில் பிக்பாஸ் சரவணனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  

'பருத்திவீரன்' படத்தின் மூலம் புகழ்பெற்ற 'சித்தப்பு' சரவணன் பிக்பாஸ் சீசன் 3-யில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஒருநாள் கமலிடம் நடிகர் சரவணன், பேருந்தில் சென்ற போது பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினார். அப்போது கமலும் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவர் கூறியது வெளியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிக்பாஸ் அதை பற்றி கன்ஃபேஷன் ரூமில் கூற, அவர் அதற்காக மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் நிகழிச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பின்னர் அவருக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருதும் சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குறைத்த முதலீட்டில் நல்ல சமூக கருத்துக்களை கூறும் நேரடி தமிழ் படங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 7 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை வெளியான தமிழ் படங்களை பார்த்து, மானியம் வழங்குவதற்கான தகுந்த படங்களை தேர்வு செய்யும் குழுவில் சரவணனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நீதிபதி குணசேகரன் தலைமையிலான இந்த குழுவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் நடிகர் சிங்கமுத்துவும் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் பலர் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். மோகன் வைத்தியா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் சமீபத்தில் வீட்டுக்குள் சென்றனர். ஆனால் சரவணன் வெளியேறிய பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் போகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், அவர் சிறப்பு விருந்தினராக உள்ளே செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 
   

  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...