இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்?!

சினிமா
Updated Sep 22, 2019 | 11:49 IST | Zoom

இந்த வாரம் செரின், சேரன், லாஸ்லியா, கவின் ஆகிய 4 பேர் நாமினேஷனில் உள்ளனர்.

Biggboss Tamil 3 week 13 eviction
Biggboss Tamil 3 week 13 eviction  |  Photo Credit: Twitter

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 இன் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கும் ஒரு வழியாக முடிந்து முகேன் கமல்ஹாசன் கையால் டிக்கெட்டை வாங்கிவிட்டார். கடைசி நாளில் 4 போட்டியாளர்கள் இருக்கையில் ஒவ்வொருவராக அன்றைய தினமே வெளியேறி இறுதி மேடையில் இருவர் மட்டுமே இருப்பர். 

இந்நிலையில் தற்போது முகேன் தவிர, கவின், லாஸ்லியா, செரின், சேரன், தர்ஷன், சாண்டி ஆகியோர் உள்ளே உள்ளனர். இந்த வாரம் செரின், சேரன், லாஸ்லியா, கவின் ஆகிய 4 பேர் நாமினேஷனில் உள்ளனர். சென்ற வாரம் வனிதா சென்ற பிறகு தொடங்கப்பட்ட டிக்கெட் ஃபினாலே டாஸ்க் இந்த வாரம் விறுவிறுப்பாக சென்றது. சேரனும் தன்னால் முடிந்த அளவு போட்டிகளில் பங்கேற்றார். கடைசி 2 போட்டிகளின் போது மட்டுமே முதுகு வலியால் சரியாக பங்கேறக்கவில்லை.

நேற்று சனிக்கிழமை கமல் பங்குபெறும் வார இறுதி நிகழ்ச்சியில் முகேனுக்கு பிக்பாஸ் வீட்டுக்கே சென்று டிக்கெட் டு ஃபினாலேவுக்கான பதக்கத்தை வழங்கினார். ஆனால் நேற்று யாரையும் காப்பற்றவில்லை. இந்நிலையில் இந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டதாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. நேற்றே இன்றைய ஷூட்டிங் நடைபெற்றுவிட்டதால், அங்கே என்ன நடந்தது என பார்வையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி முதலில் செரின் காப்பாற்றப்பட்டு, அடுத்ததாக கவின், லாஸ்லியா காப்பாற்றப்பட்டு பிறகு சேரன் எவிக்ட் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் அடுத்தடுத்து யார் வெளியேறவிருக்கிறார்கள் என்பது ஓட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். 

 


 

 

NEXT STORY