பட வாய்ப்பளித்த கமல், டைட்டில் சமர்பித்த முகேன் - மனதை வென்ற தர்ஷன்!

சினிமா
Updated Oct 07, 2019 | 09:29 IST | Zoom

பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனுக்கு கமல்ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் தர்ஷினை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக நேற்று அறிவித்துள்ளார்.

Biggboss tamil 3 Tharshan going to act in kamalhaasan production
Biggboss tamil 3 Tharshan going to act in kamalhaasan production  |  Photo Credit: Twitter

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட தனது வெற்றியை தர்ஷன சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.

கோலாகலமாக நடைபெற்ற இந்த கிராண்ட் ஃபினாலே விழாவில் மலேசிய பாடகரான முகேன் ராவ் 50 லட்ச ரூபாயையும் பிக்பாஸ் டைட்டிலையும் தட்டிச் சென்றார். ரன்னர் அப் ஆக சாண்டி மாஸ்டர் 2ஆம் இடம் பெற்றார். இந்த சீசன் டைட்டில் வெற்றிபெறுவார் என்று நம்பிய தர்ஷன் சென்ற வாரம் 5ஆம் இடம் பெற்று வெளியேறியது அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. 

தர்ஷன் ரசிகர்கள் மட்டுமின்றி, ஹவுஸ்மேட்ஸ், பிக்பாஸ் பார்வையாளர்கள் ஏன் கமலே கூட இது அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறினார். தர்ஷன் வெளியேறும்போது தனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் என்று கமல் கூறி தர்ஷன் மேலும் பல வெற்றிகள் பெறுவார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவ்வளவு திறமை வாய்ந்த பையனை தூக்கிவிடுவது எனது கடமை என்று கூறி, கமல்ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் தர்ஷினை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக நேற்று அறிவித்தார். அதோடு தர்ஷனுக்கு ஆல்-ரவுண்டர் என்ற விருதும் அளிக்கப்பட்டது.

தொடக்கம் முதலே தர்ஷன் வீட்டு வேலைகள் செய்வது, டாஸ்குகளை ஒழுங்காக செய்வது, எந்தப் பிரச்னைகளிலும் சிக்காமல் இருந்தது என இருந்ததால், எல்லோருமே எப்படியும் ஃபைனலிஸ்டில் அவர் கட்டாயம் இருப்பார் என்றே நினைத்து வந்தார்கள். அதனால் டைட்டிலை வென்ற முகேன் ராவ் இந்த வெற்றியை எனது நண்பனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பிக்பாஸ் டைட்டில் வெற்றிபெறாவிட்டாலும் மக்கள் மனதில் இடம்பெற்றுவிட்டார் தர்ஷன்!
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...