பிக்பாஸ் 3 டைட்டிலை தட்டிச்சென்ற முகேன் ராவ்!

சினிமா
Updated Oct 07, 2019 | 08:35 IST | Zoom

பிக்பாஸ் தமிழ் 3வது சீசனின் டைட்டிலை மலேசியப் பாடகர் முகேன் ராவ் வென்றார்!

Biggboss grand finale - title winner mugen rao
Biggboss grand finale - title winner mugen rao  |  Photo Credit: Twitter

106 நாட்களக் கடந்து பிக்பாஸ் தமிழ் சீசர் 3 நேற்று நிறைவுற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த கிராண்ட் ஃபினாலே விழாவில் மலேசிய பாடகரான முகேன் ராவ் 50 லட்ச ரூபாயையும் பிக்பாஸ் டைட்டிலையும் தட்டிச் சென்றார். ரன்னர் அப் ஆக சாண்டி மாஸ்டர் 2ஆம் இடம் பெற்றார்.

17 ஹவுஸ்மேட்ஸுடன் தொடங்கிய இந்த சீசன் மற்ற இரண்டு சீசன்களைவிட மிகவும் சுவாரசியமாகவும் பொழுது போக்காகவும் அமைந்தது. மற்ற சீசன்களில் சண்டை சச்சரவுகள் போல இதிலும் இருந்தாலும் இளைஞர்கள் நிறைய பேர் இருந்ததால் நிகழ்ச்சியைப் பொழுதுபோக்காகவே கொண்டுசென்றனர். முக்கியமாக முகேன் ராவ், சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோர் எந்த பிரச்சினை நடந்தாலும் பாட்டு பாடி அதனை சுமூகமாகவே கையாண்டனர். இந்த சீசன் இவ்வளவு வெற்றி பெறுவதற்கு இவர்கள் முக்கிய காரணம்.

இந்த சீசன் டைட்டில் வெற்றிபெறுவார் என்று நம்பிய தர்ஷன் சென்ற வாரம் 5ஆம் இடம் பெற்று வெளியேறியது அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இருந்தாலும் கமல்ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் தர்ஷினை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக நேற்று கூறியது, டைட்டிலையும் விட அவருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்!  17 போட்டியாளர்களும் ஒவ்வொருவராக வாரவாரம் வெளியேறி கடைசி வாரம் நான்கு பேர் மட்டுமே வீட்டில் இருந்தனர். ஷெரின், முகேன் ராவ், சாண்டி மற்றும் லொஸ்லியா ஆகிய நால்வரும் ஃபைனலிஸ்ட் ஆக இருந்த நிலையில் நேற்று சென்ற சீசன் வெற்றியாளர் ரித்விகா வீட்டுக்குள் சென்று செரினை அழைத்து வந்தார்.

 அதன்பின் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் வீட்டிற்குள் சென்று மூன்றாவது இடம் பிடித்த லாஸ்லியாவை அழைத்துச்செல்ல சாண்டியும் முகேனும் தேரில் அழைந்து வரப்பட்டு மேடையேற்றப்பட்டனர். பின் கமல்ஹாசன் இந்த சீசனின் டைட்டிலை தட்டிச் சென்றது முகேன்ராவ் என்று அறிவித்தார். 
பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொருத்தவரை உலகம் முழுவதும் ஒரு சாமானியர் முகம் தெரியாதவர் தான் இதுவரை இந்த டைட்டிலை தட்டிச் சென்றிருக்கிறார்கள் அந்த வகையில் உள்ளே நுழையும் போது யாருக்கும் தெரியாத ஒருவராக இருந்த முகேன் ராவ் தற்போது உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கிறார். வாழ்த்துக்கள் முகேன் ராவ்!

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...