தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? - செய்தியாளர்கள் சந்திப்பில் உண்மையை உடைத்த பிக்பாஸ் மதுமிதா!

சினிமா
Updated Sep 09, 2019 | 15:20 IST | Zoom

நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலை செய்துகொள்ள முயன்றதற்கான காரணத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கூறிய மதுமிதா, Biggboss madhumitha reveals reason for suicide attempt
தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கூறிய மதுமிதா   |  Photo Credit: Twitter

நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தான் தற்கொலை செய்துகொள்ள முயன்றதற்கான காரணத்தை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சில வாரங்களுக்கு முன்பு போட்டியாளர் மதுமிதா தற்கொலை செய்துகொள்ளும் விதமாக தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டார். அவருக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். போட்டியாளர்கள் தங்களை காயப்படுத்திக்கொள்வது பிக்பாஸ் விதியை மீறுவதாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவங்கள் எதுவும் ஒளிபரப்படவில்லை. மேலும் மதுமிதா எதற்காக தற்கொலை செய்துகொள்ள முயன்றார் என்பதும் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை.          

இந்நிலையில் தற்போது மதுமிதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்  பிக்பாஸ் வீட்டில் சுதந்திர தினத்தன்று ஒரு கவிதையை எழுதியுள்ளார். அந்த கவிதையில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை பற்றியும் அதன் பின்னால் உள்ள அரசியல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அந்த கவிதையில் 'வருண பகவானும் கர்நாடகத்தை சேர்ந்தவரா? மழை வடிவில் கூட தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்' என்ற வரியும் இருந்துள்ளது.  இந்த கவிதை வீட்டில் இருப்பவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் நடிகை கஸ்தூரி அவரை ஆதரித்துள்ளார். அதன் பின்னர் பிக்பாஸ் மதுமிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் அரசியில் பேசக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மதுமிதாவை மேலும் விமர்சித்துள்ளனர். இந்த சம்பவத்தால் விரக்தியடைந்த மதுமிதா கத்தியால் தன் கையை அறுத்துக்கொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.     

மேலும் இந்த சம்பவத்தை பற்றி மதுமிதா கூறுகையில் தான் எதுவும் தவறாக கூறவில்லை என்றும் தான் தற்கொலை செய்ய முயன்றதற்கு வீட்டில் யாரும் வருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். தன்னை காயப்படுத்தியதற்கு எந்த குற்றவுணர்ச்சியும் இன்றி அடுத்த நாள் காலை பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் ஹாசன் இந்த சம்பவத்தில் ஒருசாராக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.   

முன்னதாக மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான சம்பள பாக்கி இன்னும் வழங்கப்படவில்லை என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது இன்று செய்தியாளர் சந்திப்பின் மூலம் வீட்டை விட்டு வெளியேறினாலும் மதுமிதா சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்த தவறவில்லை.             
     

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...