என் மீது கொடுப்பட்ட புகார் பொய்யானது: பிக்பாஸ் மதுமிதா பேட்டி!

சினிமா
Updated Aug 22, 2019 | 18:46 IST | Zoom

பிக்பாஸில் சென்ற 2 சீசன்களை விட இந்த சீனில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில் மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டத்தை தொடர்ந்து, தற்போது நடந்து வரும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.   

என் மீது கொடுப்பட்ட புகார் பொய்யானது: மதுமிதா, Madhumitha refuses to complaint lodged against her by vijay television
என் மீது கொடுப்பட்ட புகார் பொய்யானது: மதுமிதா   |  Photo Credit: Twitter

தன்மீது விஜய் டிவி நிர்வாகம் கொடுத்த புகார் பொய்யானது என பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா தெரிவித்துள்ளாா்.   

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட பிரச்னையால் மதுமிதா தன் கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவருக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவர் தன்னை தானே காயப்படுத்தி கொண்டதால் அவர் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று கிண்டி காவல் நிலையத்தில் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில் அவர்கள் கூறுகையில் 'ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கனவே ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். பிறகு, ஒரு நாளைக்கு 80 ஆயிரம் ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம். அதை ஒப்புக் கொண்டு சென்றார். பிறகு கடந்த 19-ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலமாக மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் "தற்கொலை செய்துகொள்வேன்" என்று மிரட்டி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று மாலை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா கூறுகையில், தன் மீது கொடுக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது. அது போன்ற எந்த மிரட்டலையும் நான் விடுக்கவில்லை. எதற்காக தன் மீது இப்படி புகார் அளிக்கப்பட்டது என தெரியவில்லை. இது குறித்து விஜய் டிவி நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் யாரும் போனை எடுக்கவில்லை.  இந்த விஷயத்தால் நான் மன அழுத்தத்தில் உள்ளேன் என்று தெரிவித்தார்.

பிக்பாஸில் சென்ற 2 சீசன்களை விட இந்த சீனில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில் மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டத்தை தொடர்ந்து, தற்போது நடந்து வரும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.   

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...