5 லட்சத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸை விட்டு வெளியேறினாரா கவின்? - வெளியானது இன்றைய ப்ரோமோ

சினிமா
Updated Sep 25, 2019 | 18:10 IST | Zoom

5 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு விருப்பப்படும் போட்டியாளர் ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் என்று பிக்பாஸ் கூற, கவின் அதனை எடுக்க முன்வந்துள்ளார்.

பிக்பாஸ் இன்றைய ப்ரோமோ, BiggBoss Today's Promo
பிக்பாஸ் இன்றைய ப்ரோமோ  |  Photo Credit: YouTube

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் இன்று பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெறவுள்ளது. அதனை குறிக்கும் வகையில் இன்று 94-வது நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. 

நேற்று ஷெரினுக்கு பிக்பாஸ் வீட்டில் தனக்கு நெருக்கமான ஒருவருக்கு கடிதம் எழுதும்படி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர் தர்ஷனுக்கு உருக்கமான ஒரு கடிதத்தை எழுத, அதனை பிக்பாஸ் அனைவர் முன்னலையிலும் படிக்க சொன்னார். ஆனால் ஷெரின் அதனை மறுத்து கடிதத்தை கிழித்து போட்டுவிட்டார். எனவே அதனை தர்ஷன் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார். 

 

 

நேற்று, கடந்த சீசனின் போட்டியாளர்கள் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்களாக சென்றனர். அப்போது அவர்களின் படத்தின் டீசரை ஹவுஸ்மேட்ஸுக்கு போட்டு காட்டினர். அந்த வகையில் இன்று சென்ற சீசன் போட்டியாளர்கள் ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா வீட்டுக்குள் சென்றுள்ளனர். மேலும் போட்டியார்களுக்கு அவர்கள் அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.

 

 

இறுதியாக வெளியான ப்ரோமோ தான் ஹைலைட்! பிக்பாஸ் 5 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு விருப்பப்படும் போட்டியாளர் ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என்று கூற, அதனை யாரும் முதலில் எடுக்க முன்வரவில்லை. பின்னர் கவின் அதனை எடுத்துக்கொள்ள முன்வந்துள்ளார். 

 

 

கவின் தான் டைட்டிலுக்கு ஆசைப்படவில்லை என்று தொடந்து கூறிவருகிறார். இந்நிலையில் அவர் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாரா என்பது இன்று நிகழ்ச்சியில் தான் தெரியும். இருப்பினும் கவின் ஆர்மியைச் சேர்ந்தவர்கள் கவின் வெளியேறியது உண்மை என்றே கூறுகிறார்கள். 

 


      
             
 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...