விநாயகர் சிலைக்கு முன்பு இப்படியுமா? யாஷிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

சினிமா
Updated Jun 08, 2019 | 16:30 IST | Zoom

தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு புது சர்ச்சையில் சிக்கியுள்ளார் யாஷிகா.

Bigg Boss Tamil fame Yashika Anand
Bigg Boss Tamil fame Yashika Anand  |  Photo Credit: Instagram

சென்னை: விநாயகர் சிலை முன்பு பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் யாஷிகா. இவர் நடித்த "இருட்டு அறையில் முரட்டு குத்து" படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. சமூகவலைதளங்களில் அதீத ஆர்வம் கொண்டிருக்கும் யாஷிகா பதிவிடும் ஒவ்வொரு போட்டோவுக்கும் லைக்ஸ்கள் குவிகின்றன. 

சில நேரங்களில் கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை பதிவிடுவதை அவர் நிறுத்துவதும் இல்லை. இதை வைத்து நெட்டிசன்கள் அவ்வப்போது  வருத்தெடுக்கவும் தவறுவதில்லை.  அந்த வகையில் தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு புது சர்ச்சையில் சிக்கியுள்ளார் யாஷிகா.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dinner dinner veggies dinner ?#dinnerdate

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

சமீபத்தில் இரவு டின்னர் பார்ட்டிக்கு சென்ற யாஷிகா, ஹோட்டலின் வெளியே இருந்த விநாயகர் சிலைக்கு முன்பாக தொடை தெரியும்படி படுமோசமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.  இதைப் பார்த்த நெட்டிசன்கள் சும்மா விடுவாங்களா, யாஷிகாவை கடுமையாக திட்டி வருகின்றனர். இருப்பினும் யாஷிகா ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் " தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்" என புகழ் பாடியுள்ளார். ஆனாலும் இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

NEXT STORY