சேரன் மீரா மிதுன் சண்டை, தர்ஷன் ஷெரின் காதல், இதுதான் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோ !

சினிமா
Updated Jul 10, 2019 | 16:41 IST | Zoom

சண்டை, அழுகை, ரொமான்ஸ் என சுவாரஸ்யமாக நடந்துகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bigg Boss 3
பிக்பாஸ் சீசன் 3  |  Photo Credit: Twitter

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 தொடங்கிய நாள் முதல் அனைத்து அம்சங்களோடு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் இரண்டு சீசன் போல் இந்த சசீனுக்கும் மக்கள் அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர். கடந்த வார எலிமினேஷன் ப்ரோஸில் கிட்டத்தட்ட 10 லட்சம் வாக்குகள் பதிவானதாம். இன்று பிக்பாஸ் வீட்டில் 17-ஆம் நாளில் வழக்கம் போல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ப்ரோமோக்கள் மூலம் தெரிகிறது..

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சேரனுக்கும் மீரா மிதுனுக்கும் சண்டை உண்டாவது போல் உள்ளது. பிக்பாஸ் வீட்டில் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்றிருக்கும் சேரன் இன்று மீரா மிதுனால் கடுப்பானார். மீரா மிதுன் வீட்டுக்குள் வந்த போது சேரன் அவர் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார் என்று கூறியதாக மீரா மிதுன் கூறினார். பிரச்னையை முடிக்க சேரன் மன்னிப்பு கேட்ட நிலையிலும் பிரச்சனை முடியவில்லை. பின்பு மீரா நான் வீட்டில் எந்த வேலையும் செய்யவில்லை என்று எல்லாம் சொல்லாதீர்கள் என்று கூற சேரன் கடுப்பாகிவிட்டார். அவரின் பேச்சை கேட்க முடியாமல் அந்த இடத்தை விட்டு மீரா மிதுன் சென்றுவிட்டார்.      

 

 

அடுத்ததாக வெளியான ப்ரோமோவில் ஷெரினுக்கு கொக்கி போட தொடங்கிவிட்டார் தர்ஷன். தான் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்து ஷெரினை நேசிப்பதகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் ஹாலில் அமர்ந்து ரொமான்டிக்காக பேசிக்கொள்கின்றனர். ஆனால் இது வெறும் டாஸ்க் போல தான் தெரிகிறது. நேற்று பேய் டாஸ்கில் மோகன் வைத்யா மற்றும் சாக்ஷி ஆவியாக மாற அதன் தொடர்ச்சியான சம்பவங்களில் பிக்பாஸ் தர்ஷனுக்கு இந்த டாஸ்கை கொடுத்திருப்பார் போல.  

 

இறுதியை வெளியான ப்ரோமோவில் மதுமிதா சாக்ஷி அகர்வால் வெளியில் நன்றாக நடிப்பார் ஆனால் அதை விட பிக்பாஸ் வீட்டில் இன்னும் அருமையாக நடிக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் சாக்ஷி கவினை காதலிப்பது போல் நடிக்கிறார், அது கவினுக்கே தெரியாது என்றெல்லாம் கூறியுள்ளார். அனேகமாக இது டாஸ்க் ஆக தான் இருக்க வேண்டும், இல்லையென்றால் வீட்டிற்குள் ஒரு பிரளயமே வந்திருக்கும்.

  

 பிக்பாஸ் வீட்டில் 17-வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகிவுள்ள நிலையில், இன்று நிகழ்ச்சியில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   

NEXT STORY
சேரன் மீரா மிதுன் சண்டை, தர்ஷன் ஷெரின் காதல், இதுதான் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோ ! Description: சண்டை, அழுகை, ரொமான்ஸ் என சுவாரஸ்யமாக நடந்துகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola