உறுதியானது ‘பிக்பாஸ் 3’ - கமல்ஹாசன் இடம்பெறும் முதல் ப்ரோமோ வெளியீடு!

சினிமா
Updated May 15, 2019 | 16:06 IST | Zoom

போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், வழக்கம்போல யூகங்கள் அடிப்படையிலான போட்டியாளர்கள் பட்டியல் வழக்கம்போல சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது.

bigg boss 3, பிக் பாஸ் 3
கமல்ஹாசன்  |  Photo Credit: Twitter

சென்னை: புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தமிழில் அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. அதற்கான முதற்கட்ட ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

முதல் இரண்டு சீசன்களைப் போலவே இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவிருக்கிறார். அது இந்த முதல் கட்ட ப்ரோமோ வீடியோ மூலமாக உறுதியாகியிருக்கிறது. மேலும், இந்த முறை சற்றே ஸ்டைலிஷான லோகோவும் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. 

 இந்த ப்ரோமோ ஷூட் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், வழக்கம்போல யூகங்கள் அடிப்படையிலான போட்டியாளர்கள் பட்டியல் வழக்கம்போல சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது.

ஹாலிவுட், பாலிவுட் என்று புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சி முதன்முதலில் விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் சீசன் ஒளிப்பரப்பானது. மேலும், அதிகளவிலான ரசிகர்களையும் பெற்று பிரபலமானது. முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா வெற்றி பெற்றார். 

இந்நிலையில், மூன்றாவது சீசன் இனிதே துவங்க உள்ளது. இதற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்கான முதல் ப்ரோமோவை இன்று வெளியிட்டுள்ளது விஜய் டிவி. வெளியுலகத் தொடர்பே இல்லாமல் 100 நாட்கள் போட்டியாளர்கள் கேமராக்கள் கண்காணிக்கும் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும். கடைசி வரை டாஸ்க்குகளில் எல்லாம் ஜெயித்து, ரசிகர்களின் ஓட்டுகளையும் தட்டிச் செல்பவர்களுக்கு பிக்பாஸ் டைட்டில் வழங்கப்படும். பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
உறுதியானது ‘பிக்பாஸ் 3’ - கமல்ஹாசன் இடம்பெறும் முதல் ப்ரோமோ வெளியீடு! Description: போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், வழக்கம்போல யூகங்கள் அடிப்படையிலான போட்டியாளர்கள் பட்டியல் வழக்கம்போல சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது.
Loading...
Loading...
Loading...