பிக்பாஸ் சீசன் 3ன் 16வது போட்டியாளர் மீரா மிதுன்; வீட்டிற்குள் வெற்றிகரமாக நுழைந்தார்!

சினிமா
Updated Jun 25, 2019 | 23:10 IST | Zoom

நேற்று முதல்நாள் எந்தவித ரகளையும் இன்றி பிக்பாஸ் வீடு காணப்பட்டாலும், இரண்டாவது நாளான இன்றிலிருந்து அங்கங்கே ஹவுஸ்மேட்களிடம் சிலச்சில உரசல்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. 

bigg boss 3, பிக் பாஸ் 3
மீரா மிதுன்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஆரவாரமாக துவங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மேலும் ஒரு போட்டியாளர் உள்நுழைந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகின்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்றுக் கிழமை துவங்கியது. பாத்திமா பாபு, சேரன், சரவணன் உட்பட 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ஹவுஸ்மேட்களாக நுழைந்து போட்டியிட்டு வருகின்றனர்.

நேற்று முதல்நாள் எந்தவித ரகளையும் இன்றி பிக்பாஸ் வீடு காணப்பட்டாலும், இரண்டாவது நாளான இன்றிலிருந்து அங்கங்கே ஹவுஸ்மேட்களிடம் சிலச்சில உரசல்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. 

 

 

இந்தமுறை 17 போட்டியாளர்கள் என்று கூறப்பட்ட நிலையில் முதல்நாளில் 15 போட்டியாளர்கள்தான் உள்நுழைந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் இரண்டு கார்டுகளை கமல்ஹாசன் கைகளில் வைத்திருந்ததற்கு ஏற்ப இன்று அவர்களில் ஒருவர் சர்ப்ரைஸாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 

சமீபத்தில் அழகிப்போட்டி நடத்த முயன்று சர்ச்சையில் சிக்கிய மாடல் அழகி மீரா மிதுன் தான் அவர். சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இரவு குடும்பமே உற்சாகமாக ஆடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று உள்ளே நுழைந்துள்ளார் மீரா மிதுன். அவர் வருகை சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில், இரண்டு நாட்களாக கலகலப்பு வீடாக இருக்கும் பிக்பாஸ் வீடு விரைவில் கல்யாண வீடு மாதிரி கைகலப்புகள் நிறைந்த வீடாக ஆகலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகளும் தெரிகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்!

NEXT STORY
பிக்பாஸ் சீசன் 3ன் 16வது போட்டியாளர் மீரா மிதுன்; வீட்டிற்குள் வெற்றிகரமாக நுழைந்தார்! Description: நேற்று முதல்நாள் எந்தவித ரகளையும் இன்றி பிக்பாஸ் வீடு காணப்பட்டாலும், இரண்டாவது நாளான இன்றிலிருந்து அங்கங்கே ஹவுஸ்மேட்களிடம் சிலச்சில உரசல்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola