தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு

சினிமா
Updated Jun 10, 2019 | 17:29 IST | Times Now

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு ஜூலை 14-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Director Bharathi raja, இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்து வருகிறார். பொதுச் செயலாளராக ஆர்.கே. செல்வமணியும், பொருளாளராக பேரரசும் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா தலைவராக தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட விரும்பவில்லை என்பதால், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மற்ற பதவிகளுக்கு ஜூலை 14-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 

NEXT STORY