அருவம், பெட்ரோமாக்ஸ், பப்பி... இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் இவைதான்!

சினிமா
Updated Oct 10, 2019 | 12:30 IST | Zoom

இந்த வாரம் 'அருவம்', 'பெட்ரோமாக்ஸ்', 'பப்பி' ஆகிய 3 படங்கள் திரைக்கு வருகின்றன. 

இந்த வார ரிலீஸ் , Movies Releasing This Week
இந்த வார ரிலீஸ்   |  Photo Credit: Twitter

இந்த வாரம் தமிழில் 'அருவம்', 'பெட்ரோமாக்ஸ்', 'பப்பி' ஆகிய படங்கள் வெளியாகின்றன. இது தவிர ஆங்கிலத்தில் வில் ஸ்மித்தின் 'ஜெமினி மேன்' திரைப்படமும் ஹிந்தியில் பர்ஹான் அக்தர், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியாகும் 'ஸ்கை இஸ் பிங்க்' படமும் வெளியாகின்றன. கடந்த வாரம் வெளியான 'அசுரன்', 'ஜோக்கர்' போன்ற படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியாகும் படங்களுக்கு திரையரங்கம் ஒதுக்குவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் நாளை வெளியாக இருந்த 'மிக மிக அவசரம்' திரைப்படம் அடுத்த வாரதிற்கு தள்ளிவைக்கப்பட்டு இந்த வாரம் 3 தமிழ் படங்கள் திரைக்கு வெளியாகின்றன. 
   
அருவம்: 

இந்த வாரம் வெளியாகும் படங்களில் அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படம் 'அருவம்'. நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கேத்தரின் தெரசா கதாநாயகியாக நடிக்கிறார். கபீர் சிங், மதுசூதனன், ஆடுகளம் நரேன், சதீஷ், இளங்கோ குமரவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் சாய் சேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். உணவில் நடக்கும் கலப்படம் பற்றி பேசும் இப்படத்தில் சித்தார்த் உணவு துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் நாளை வெளியாகிறது.

 

 

பெட்ரோமாக்ஸ்:

2017-ஆம் ஆண்டு டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற தெலுங்கு படமான 'ஆனந்தோ பிரம்மா' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த 'பெட்ரோமாக்ஸ்' திரைப்படம். இப்படத்தில் டாப்ஸி வேடத்தில் தமன்னா நடித்துள்ளார். யோகி பாபு, சத்யன், முனீஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படம் நாளை அக்டோபர் 11-ஆம் தேதி வெளியாகிறது.

 

 

பப்பி: 

வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் 'பப்பி' படத்தில் வருண் மற்றும் சம்யுக்தா ஹேக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், மாரிமுத்து ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனரான நட்டு தேவ் இப்படத்தை இயக்கியுள்ளார். காமெடி திரைப்படமான இது நாளை திரைக்கு வருகிறது.  

 

          

 

               

NEXT STORY