சிங்கமாக அருண் விஜய், நரியாக பிரசன்னா... கலக்கும் 'மாஃபியா' டீசர்!

சினிமா
Updated Sep 17, 2019 | 12:24 IST | Zoom

நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தின் டீசரை பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் நரேனையும் படக்குழுவினரையும் பாராட்டினார்.

 'மாஃபியா' படத்தின் டீசர், 'Mafia' movie Teaser
'மாஃபியா' படத்தின் டீசர்  |  Photo Credit: YouTube

கார்த்திக் நரேன் இயக்கியுள்ள 'மாஃபியா' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மாஃபியா'. பிரியா பவானி ஷங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 'அஞ்சாதே', 'திருட்டு பயலே-2' படங்களை தொடர்ந்து நடிகர் பிரசன்னா மீண்டும் 'மாஃபியா' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தின் டீசரை பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் நரேனையும் படக்குழுவினரையும் பாராட்டினார். அதனை தொடர்ந்து 'மாஃபியா' படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூரவமாக வெளியானது.       

 

 

வழக்கமான ஹீரோ-வில்லன் பாணியில் டீசர் அமைந்திருந்தாலும் அதனை காட்சிப்படுத்திய விதமும், வசனங்களும் பெரும் பலமாய் அமைத்துள்ளது. காட்டில் எப்படி தன் பலத்தால் வேட்டையாடும் சிங்கத்திற்கும், தந்திரத்தால் அதனை தோற்கடிக்க முயலும் நரிக்கும் நடக்கும் சண்டைபோலவே இப்படத்தின் மூல கருவும் அமைத்துள்ளது என்பதை டீசர் உணர்த்துகிறது. மேலும் டீசரில் பின்னணி இசையும், அசத்தலான ஒளிப்பதிவும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

'மாஃபியா' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்கள் இப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திய நிலையில் தற்போது டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'துருவங்கள் பதினாறு' படம் மூலம் கவனிக்கதக்க இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள கார்த்திக் நரேனின் இரண்டாவது படமான 'நரகாசூரன்' நிதி சிக்கல் காரணமாக இன்னும் வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து அவர் அடுத்தாக இயக்கியுள்ள 'மாஃபியா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் படத்தின் ரிலீஸ் பற்றியும் பாடல்கள் பற்றியும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.               
  

NEXT STORY