'பொன்னியின் செல்வன்' அப்டேட்: 25 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் வெற்றி கூட்டணி!

சினிமா
Updated Sep 09, 2019 | 17:37 IST | Zoom

'செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் தற்போது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கவுள்ளார்.

 'பொன்னியின் செல்வன்' படத்தில் கலை இயக்குனர் தோட்டா தரணி பணியாற்றவுள்ளார், Art director thotta tharani to work in Mani Rathnam's 'Ponniyin Selvan'
'பொன்னியின் செல்வன்' படத்தில் கலை இயக்குனர் தோட்டா தரணி பணியாற்றவுள்ளார்.  |  Photo Credit: Twitter

இயக்குனர் மணிரத்னம் அடுத்ததாக இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி பணியாற்றவுள்ளார். 

'செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் தற்போது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கவுள்ளார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், அமிதாப் பச்சன், ஜெயராம் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடக்கவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரமான வாணர் குலத்து வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கவுள்ளனர். மேலும் சுந்தர சோழனாக அமிதாப் பச்சனும், நந்தினி மற்றும் சிங்கள நாச்சியார் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கவுள்ளார்.   

இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பணியாற்றவுள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது இப்படத்தில் கலை இயக்குனராக தோட்டா தரணி பணியாற்றவுள்ளார்.  'மௌனராகம்', 'நாயகன்', 'தளபதி', 'பம்பாய்' என மணிரத்தனத்தின் பல வெற்றி படங்களுக்கு இவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் 'நாயகன்' படத்திற்கு இவர் தேசிய விருதும் வாங்கியுள்ளார். இறுதியாகி 'பம்பாய்' படத்தில் பணியாற்றிய இந்த வெற்றிக்கூட்டணி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இணையவுள்ளனர். 10-ஆம் நூற்றாண்டில் நடைபெரும் 'பொன்னியின் செல்வன்' கதை உறையூர், தஞ்சாவூர், காஞ்சி, ஈழம் என சரித்திர முக்கியத்துவம் கொண்ட பல இடங்களில் நடைபெறும். மேலும் பிரமாண்ட கோட்டைகள், காடுகள், சமுத்திரங்கள் என பல நிலப்பரப்பில் நடைபெறும் இப்படத்திற்காக தோட்டா தரணியை மணிரத்னம் தேர்வு செய்துள்ளார்.        

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதற்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் இப்படத்தில் 12 பாடல்கள் உள்ளது என்றும், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் அனைத்து  பாடல்களையும் தானே எழுதுவதாக வைரமுத்து சமீபத்தில் தெரிவித்தார். அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாகவும், படப்பிடிப்பு தொடங்கப்படும் நாளன்று தான் படக்குழுவினரை பற்றிய அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரியவருகிறது.                          

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...