சைலன்ஸ் பட லுக்கை வெளியிட்ட அனுஷ்கா!

சினிமா
Updated Jul 03, 2019 | 17:03 IST | Zoom

த்ரில்லர் படமான இந்தப்படத்தில்  அனுஷ்கா காது கேட்காத பார்வை இல்லாதவராக நடிக்கிறார்

Anushka Shetty
அனுஷ்கா ஷெட்டி  |  Photo Credit: Twitter

கடைசியாக சென்ற வருடம் வெளியான பாகமதி படத்துக்குப் பிறகு அனுஷ்கா படங்களில் நடிக்கவில்லை. பெரும்பாலும் அனுஷ்கா வருடத்துக்கு 4-5 படங்களாவது நடித்திருப்பார். பாகுபலி 1, 2 படங்களுக்குப் பிறகு அனுஷ்கா நடித்த படம் பாகமதி மட்டுமே. அவர் உடல் எடை கூடிவிட்டதால் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்றும் பாகுபலியில் இவருடன் நடித்த பிரபாஸுடன் விரைவில் திருமணம் என்றும் பல செய்திகள் கூறப்பட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பழைய அனுஷ்காவாக ஸ்லிம் ஸ்வீட்டியாக ஒரு புகைப்படம் ரிலீஸாகி வைரல் ஆனது. அதில் தனது ஃபிடஸ் ட்ரைனருடன் இருந்த அனுஷ்கா, தனது உடல் எடைக்குறைப்பின் ரகசியத்தின் ஒரு புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகமும் நல்ல வரவேற்பு பெற்றது.

அதன்பிறகு தெலுங்கில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும்  வரலாற்றுப் படமான சைரா நரசிம்மா ரெட்டியில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் நயன் தாரா , அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அந்த ஹூட்டிங்கில் அனுஷ்காவுக்கு  விபத்து ஏற்பட்டுவிட்டதாக  தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை அனுஷ்கா மறுத்திருந்தார். இந்தத் தெலுங்கு படத்துக்குப் பிறகு நடிகர் மாதவன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படத்தில் அனுஷ்கா வித்தியாசமான முயற்சி எடுத்து நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்களுடன் அஞ்சலி,  ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த்ப் படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகிவரும் இந்த படத்துக்கு சைலன்ஸ் என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் மலையாளம், ஹிந்திலும் டப்பிங் செய்யப்படுகிறது.

த்ரில்லர் படமான இந்தப்படத்தில்  அனுஷ்கா காது கேட்காத பார்வை இல்லாதவராக நடிக்கிறார். இதற்காக பிரத்யேகமாக அனுஷ்கா பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அந்தப்படத்தின் ஒரு ஸ்டில்லை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இதில் படத்தில் முகம் மறைக்கப்பட்டு இருப்பதால், விரைவில் வெளிச்சத்துக்கு வருவேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப்படத்தின் பெரும்பாலான பகுதிகளின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். இதனால் விரைவில் இந்தப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

NEXT STORY
சைலன்ஸ் பட லுக்கை வெளியிட்ட அனுஷ்கா! Description: த்ரில்லர் படமான இந்தப்படத்தில்  அனுஷ்கா காது கேட்காத பார்வை இல்லாதவராக நடிக்கிறார்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles