’வெற்றி நமதே’ - மான்செஸ்டரில் உலகக்கோப்பை போட்டியை கண்டுகளித்த அனிருத், சிவகார்த்திகேயன்; வைரல் புகைப்படம்!

சினிமா
Updated Jun 17, 2019 | 20:12 IST | Zoom

உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி கடந்த மே 30ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

world cup, உலகக்கோப்பை
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன்  |  Photo Credit: Twitter

இங்கிலாந்து: இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக்கோப்பைக்கான லீக் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த போட்டியை நேரில் சென்று ரசித்துள்ளனர்.

உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி கடந்த மே 30ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ஒரு போட்டியாக எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. உலகம் முழுவதிலும் இருந்து இந்த போட்டியைக் காண எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் மான்செஸ்டர் நகரில் குவிந்திருந்தனர்.

 

 

அப்படி குவிந்த ரசிகர்களில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். இந்திய ஜெர்சி அணிந்து எடுத்த புகைப்படத்தை மைதானத்தில் இருந்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அனிருத், ‘வெற்றி நமதே..இது எனது வாழ்நாள் அனுபவம்’ என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைர்லாகி வருகிறது. 

NEXT STORY
’வெற்றி நமதே’ - மான்செஸ்டரில் உலகக்கோப்பை போட்டியை கண்டுகளித்த அனிருத், சிவகார்த்திகேயன்; வைரல் புகைப்படம்! Description: உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி கடந்த மே 30ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles